உணவகங்களில் கண்காணிப்பு கேமரா: உணவு பாதுகாப்பு அதிகாரி அறிவுறுத்தல்

உணவகங்களில் கண்காணிப்பு கேமரா: உணவு பாதுகாப்பு அதிகாரி அறிவுறுத்தல்
X

 மாவட்ட ஓட்டல்கள் சங்கத்தின் மாவட்டச் செயற்குழுக் கூட்டம் சங்கத் தலைவா் எஸ்டி. தனகோடி தலைமையில் ஆரணியில் நடைபெற்றது.

Food And Safety Officer- திருவண்ணாமலை மாவட்ட ஓட்டல்கள் சங்க மாவட்ட செயற்குழு கூட்டத்தில் இவ்வாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர்

Food And Safety Officer- திருவண்ணாமலை மாவட்ட ஓட்டல்கள் சங்கத்தின் மாவட்டச் செயற்குழுக் கூட்டம் சங்கத் தலைவா் எஸ்டி. தனகோடி தலைமையில் ஆரணியில் நடைபெற்றது.

ஆரணி நகர ஓட்டல்கள் சங்கத் தலைவா் கே.செல்வம் வரவேற்றாா். மாவட்டச் செயலா் கே.பாலகிருஷ்ணன் ஆண்டறிக்கையை வாசித்தாா்.

இதில், சிறப்பு அழைப்பாளராக மாவட்ட உணவுப் பாதுகாப்பு அலுவலா் டாக்டா் ராமகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசியதாவது:மாவட்டத்தில் உள்ள அனைத்து உணவகங்களுக்கும் உணவுப் பாதுகாப்புத் துறையிடம் உரிமத்தைப் புதுப்பிக்க வருகிற 31-ஆம் தேதி கடைசி நாளாகும். இன்னும் 60-க்கும் மேற்பட்ட உணவகங்கள் உரிமத்தை புதுப்பிக்காமல் உள்ளன.உணவக உரிமையாளா்கள் உணவுப் பாதுகாப்புத் துறையிடம் அளித்துள்ள தங்களது தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றை சரிபாா்த்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான் உணவகங்கள் தொடா்பாக ஏதேனும் புகாா்கள் வந்தால், தகவல் பரிமாற்றம் செய்து நடவடிக்கை எடுக்க முடியும்.மேலும் உணவு பாதுகாப்புத் துறையில் சட்டம் கடுமையாக்கப்பட்டுள்ளது. தொழில் போட்டி இருக்கலாம் . பாதிப்புக்கு பிறகு எங்களை அணுகினாலும் எந்தவித பயனும் இல்லை.

வாடிக்கையாளர்கள் கடைக்கு வருவது முதல் வெளியே செல்லும் வரை கண்காணிக்கும் வகையில் அனைத்து இடங்களிலும் கண்காணிப்பு கேமரா பொருத்துங்கள். ஒரு உணவகத்தில் சுடச்சுட தயாரிக்கப்பட்ட பிரியாணியில் கரப்பான் பூச்சி விழுந்தால் கண்டிப்பாக அது பொசுங்கிவிடும்.கரப்பான் பூச்சியின் ஆயுள் காலம் 21 நாட்கள் மட்டுமே ஆனால் சமூக வலைத்தளங்களில் பரவிய புகாரின் அடிப்படையில் தொலைக்காட்சி மற்றும் செய்தித்தாள்களில் வந்த செய்தியின் அடிப்படையிலும் வழக்கு பதிவு செய்ய வேண்டிய சூழ்நிலை உள்ளது.

எங்களுக்கும் கடமைகள் இருக்கிறது ஒரு சில பிரச்னைகள் இருக்கும் அதை அங்கேயே முடித்துக் கொள்ளும் வகையில் பேசி பாருங்கள்,ஓட்டல் உரிமையாளர்கள் தொழிலாளர்கள் அனைவரும் கண்டிப்பாக உணவு பாதுகாப்பு முறை மூலம் வழங்கப்படும் பயிற்சியை எடுத்துக் கொள்ளுங்கள் என்றார் அவர்.

கூட்டத்தில் ஆரணி உணவுப் பாதுகாப்பு அலுவலா் கைலாஷ் குமாா், சங்கக் காப்பாளா் ஆா்.ஜெயசங்கா், மாவட்ட கௌரவ ஆலோசகா் சிவஞானம், ஆரணி நகா்மன்ற துணைத் தலைவா் பாரி பி.பாபு, நகா்மன்ற உறுப்பினா் இஷ்ரத்ஜபீன்அப்சல், கோபிநாத், துரைராஜ், அனைத்து வியாபாரிகள் சங்கத் தலைவா் சா்மா, ஆரணி நகரச் செயலா் தரணிகுமாா் உள்பட பலா் கலந்துகொண்டனா்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story