ஆரணி அருகே அரசு தொடக்கப்பள்ளியில் மாவட்ட கல்வி அலுவலர் ஆய்வு

ஆரணி அருகே   அரசு தொடக்கப்பள்ளியில் மாவட்ட கல்வி அலுவலர் ஆய்வு
X

தொடக்கப் பள்ளி ஆய்வின்போது மாவட்ட கல்வி அலுவலர் பள்ளி வளாகத்தில் மூலிகை செடிகளை நட்டார்

ஆரணி அருகே ஊராட்சி தொடக்கப்பள்ளியில் மாவட்ட கல்வி அலுவலர் ஆய்வு செய்தார்.

திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அருகே உள்ள ராமசாணிக்குப்பம் ஊராட்சி தொடக்கப்பள்ளியில் ஆரணி மாவட்ட கல்வி அலுவலர் சந்தோஷ் நேரில் ஆய்வு செய்தார்.

பள்ளியில் உள்ள கைகழுவும் அறை, காய்கறி, மலர் மூலிகை தோட்டங்கள், பள்ளி வளாகம் ஆகியவற்றை பார்வையிட்டு முன் மாதிரி பள்ளி என தலைமை ஆசிரியர் தாமரைச்செல்வியை பாராட்டினார். அங்கு மூலிகை செடிகளையும் நட்டு வைத்தார்.

அப்போது முன்னாள் ராணுவ வீரர் பிரபாகரன், கல்வியாளர் ஜெயராமன், வட்டார கல்வி அலுவலர் அருணகிரி, பள்ளி மேலாண்மை குழுவினர் உள்பட பலர் உடனிருந்தனர். முன்னதாக நடந்த இறைவணக்கக் கூட்டத்தில் கல்வி அலுவலர் சந்தோஷ் கலந்து கொண்டு பேசினார். மேலும் மேலாண்மை குழுவினருக்கு அடையாள அட்டைகளை வழங்கினார்.

Tags

Next Story
தினம் 1 ! வேகவைத்த முட்டை சாப்பிட்டால் உடம்புக்கு அவ்வளவு சத்துக்கள்  கிடைக்கும் ... வேறென்ன வேணும்...! | Egg benefits in tamil