களம்பூர் ரைஸ் மில்களில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த களம்பூரில் உள்ள 5க்கும் மேற்பட்ட ரைஸ் மில்களில் நேற்று வருமான வரித்துறையினர் மற்றும் தேர்தல் பறக்கும் படையில் திடீர் சோதனை நடத்தினர்.
தமிழகத்தில் வரும் 19ம் தேதி மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி, தேர்தல் நடத்த விதிமுறைகள் அமலில் இருந்தது வருகிறது. மேலும், தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் வழங்குவதை தடுக்கும் பொருட்டு தேர்தல் பறக்கும் படை மற்றும் நிலை கண்காணிப்பு குழு தொடர்ந்து 24 மணி நேரம் வாகன சோதனை ஈடுபட்டு வருகின்றனர். மேலும், தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் வருமானவரித்துறை அதிகாரிகளும் சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த களம்பூர் பகுதியில் உள்ள 5க்கும் மேற்பட்ட மார்டன் ரைஸ் மில்களில் சென்னை மற்றும் திருவண்ணாமலை பகுதியை சேர்ந்த வருமான வரித்துறை இணை இயக்குனர் தலைமையில் 24 க்கும் மேற்பட்ட குழுவினர் மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் நேற்று மதியம் அதிரடியாக சோதனை நடத்தினர். மேலும், அந்த 5 ரைஸ் மில்களில் சோதனை தொடர்ந்து நடத்தி வந்தனர். அப்போது வருமானவரித்துறை அதிகாரிகள், தேர்தல் பறக்கும் படை குழுவினர் ரைஸ்மில்களில் இருந்த முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்து சோதனையை நடத்தினர். இந்த ரைஸ் மில்களில் சுமார் 8 மணி நேரம் வருமானவரித்துறை அதிகாரிகள் மற்றும் தேர்தல் பறக்கும் படை குழுவினர் சோதனை செய்து 5 க்கும் மேற்பட்ட பைகளில் முக்கிய ஆவணங்கள் மற்றும் பணம் பறிமுதல் செய்து வாகனங்களில் எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது.
நேற்று முன்தினம் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதிகளில் உள்ள நகை கடைகளிலும் கடந்த வாரம் போளூர் சேத்துப்பட்டு பகுதியில் உள்ள நகை கடைகளிலும் வருமான வரித்துறை என திடீர் சோதனையில் ஈடுபட்டு வந்த நிலையில் திடீரென அரிசி ஆலைகளில் சோதனை நடத்தியது வியாபாரிகள் இடையே பெரும் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu