ஆரணி தலைமை அஞ்சலகத்தில் தேசிய அஞ்சல் வார தொடக்க விழா

அஞ்சலக வார விழா கண்காட்சியை ஆரணி கோட்ட கண்காணிப்பாளா் ஆா்.அமுதா குத்துவிளக்கேற்றி தொடக்கிவைத்தாா்.
Post Office Head Office -திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி தலைமை அஞ்சலகத்தில் தேசிய அஞ்சல் வார தொடக்க விழாவிற்கு ஆரணி தலைமை அஞ்சலக அதிகாரி சீனிவாசன் தலைமை வகித்தாா். கோட்ட கண்காணிப்பாளா் அமுதா சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று அஞ்சல் சேவைகளை விளக்கும் வகையில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சியை குத்துவிளக்கேற்றி தொடக்கிவைத்தாா்.
நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது
தேசிய அஞ்சல் வார விழாவை முன்னிட்டு அதிகளவில் புதிய கணக்குகளை தொடங்கி வருகிறோம். பொதுமக்கள் தங்கத்தில் முதலீடு செய்வதை வரவேற்கிறோம்.
அஞ்சலகத்தில் தங்கத்தில் முதலீடு செய்தால் 8 ஆண்டுகளுக்குப் பிறகு அன்றைய தங்க நகை மதிப்பு தரப்படும். 6 மாதங்களுக்கு ஒருமுறை 2.5 சதவீதம் வட்டி மதிப்பு அசலுடன் சோக்கப்படும். பட்டதாரிகள் அஞ்சலகத்தில் காப்பீடு செய்ய வலியுறுத்துகிறோம். பட்டதாரிகளுக்கு போனஸ் வசதியுள்ளது என்றாா்.
மேலும் அவர் கூறுகையில், அனைத்து அஞ்சல் அலுவலகங்களிலும் ஆதார் மையம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. பெயர் திருத்தல், பெயர் சேர்த்தல் மற்றும் ஆதார் எண்ணுடன் பான் இணைத்தல்,. விவசாயிகளுக்கு அரசு வழங்கும் மானிய திட்டத்தில் அவர்களது ஆதார் எண்ணை பதிவு செய்தல் என பல்வேறு திட்டங்கள் அஞ்சல் அலுவலகங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தபால் மற்றும் பார்சலுக்கு யுபிஐ மூலம் பணம் செலுத்தும் புதிய வசதி அஞ்சல் துறையில் செயல்பட்டு வருகிறது. இந்தியாவில் உள்ள அனைத்து வகையான பணப் பரிவர்த்தனை முறைகளையும் ஒன்றிணைக்கும் நோக்கில் நேஷனல் பேமென்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா நிறுவனம், ரிசர்வ் வங்கி, இந்திய வங்கிகள் கூட்டமைப்பு ஆகியவை இணைந்து முயற்சி மேற்கொண்டதன் விளைவாக கடந்த 2009-ம் ஆண்டு யுபிஐ உருவானது. நேரடி பணப் பரிவர்த்தனைக்கு மாற்றாக, பாதுகாப்பான, மிக எளிமையான, அனைத்தையும் உள்ளடக்கிய பணப் பரிவர்த்தனை அமைப்புதான் யுபிஐ. இது நாட்டில் உள்ள பல்வேறு வங்கிகளை ஒருங்கிணைத்து, அவற்றுக்கு இடையிலான பரிவர்த்தனை நடைமுறையை எளிதாக்குகிறது. ஸ்மார்ட்போன் செயலி வழியாக ஒரு வங்கியில் இருந்து எந்த வங்கிகளுக்கு வேண்டுமானாலும் பணப் பரிவர்த்தனை மேற்கொள்வதை இது சாத்தியப்படுத்துகிறது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தலைமை அஞ்சல் நிலையங்கள் மற்றும் துணை அஞ்சலகங்களிலும் இந்த சேவை வழங்கப்பட்டு வருகிறது. உள்நாடு வெளிநாடுகளுக்கு அனுப்பும் பதிவு தபால்கள் விரைவு தபால்கள் பார்சல்களுக்கு யுபிஐ க்யூ ஆர் கோட் மூலம் பணம் செலுத்தலாம். மேலும் சேமிப்பு கணக்கு தொடர் வைப்பு கணக்கு உள்ளிட்ட மற்ற சேவைகளுக்கும் யூபிஐ மூலம் பணம் செலுத்தலாம் என்று கூறினார்
நிகழ்வில் மாவட்ட உதவிக் கோட்ட கண்காணிப்பாளா்கள் ரங்கராஜன், சுவாமிநாதன், காா்த்திகேயன், போளூா் ஆய்வாளா் சுந்தரவடிவேல், உதவிக் கோட்ட அலுவலா்கள் தேவபாலன், துரைராஜன், சிவக்குமாா், கணக்குப் பிரிவு அலுவலா் ஜான்சிராணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu