ஆரணி நகரில் நகர்ப்புற நலவாழ்வு மையம் திறப்பு

கர்ப்பிணிகளுக்கான கிட்டுகளை வழங்கிய நகர மன்ற தலைவர்
ஆரணி டவுன் கார்த்திகேயன் சாலையில் மருத்துவம் மற்றும் மக்கள் நலவாழ்வு துறை மூலம் புதிய நகர்ப்புற நலவாழ்வு மைய கட்டிடம் ரூ.25 லட்சத்தில் கட்டப்பட்டது. இப்பணிகள், முடிவடைந்ததையொட்டி நேற்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
பின்னர் நகர்புற நலவாழ்வு மையம் கட்டிடத்தில் தொடக்க விழா இன்று நடந்தது. முன்னாள் எம்.எல்.ஏ. சிவானந்தம், ஒன்றிய செயலாளர் எஸ்.எஸ்.அன்பழகன், கண்ணமங்கலம் பேரூராட்சி தலைவர் மகாலட்சுமி கோவர்த்தணன், நகராட்சி ஆணையாளர் தமிழ்ச்செல்வி, நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் மருத்துவ அலுவலர்கள் செந்தில்குமார், பவதாரணி, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் இளங்கோ ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
எஸ்.வி.நகரம் ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் ஹேம்நாத் வரவேற்றார். நகர்ப்புற நலவாழ்வு மைய கட்டிடத்தை நகரமன்ற தலைவர் ஏ.சி.மணி ரிப்பன் வெட்டி திறந்து வைத்து, குத்துவிளக்கு ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.
தொடர்ந்து கர்ப்பிணிகளுக்கான கிட்டுகளையும் வழங்கினார். இதில் ஒன்றியக்குழு துணைத்தலைவர் ராஜேந்திரன், நகரமன்ற உறுப்பினர்கள் விநாயகம், இஸ்ரத்ஜபீன் அப்சல், அரவிந்தன், முன்னாள் நகரமன்ற உறுப்பினர்கள் , ஒன்றிய கவுன்சிலர்கள் சுகாதாரத்துறையினர், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
திமுக அரசின் சாதனை விளக்க தெருமுனை பிரசாரக் கூட்டம்
திருவண்ணாமலை வடக்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி சார்பாக தி.மு.க. ஆட்சியில் ஈடில்லா ஆட்சி ஈராண்டே சாட்சி என ஆரணி சட்டமன்ற தொகுதியில் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் எவரெஸ்ட் நரேஷ்குமார் தலைமையில் தெருமுனை பிரசார பொதுக்கூட்டம் நடந்தது.
நகா்மன்றத் தலைவா் ஏ.சி.மணி, ஒன்றியச் செயலா்கள் அன்பழகன், சுந்தா், இளைஞா் அணி மாவட்ட துணை அமைப்பாளா் ரஞ்சித் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில் தலைமைக் கழகப் பேச்சாளா் வண்ணை புகாரி பேசினாா். தெருமுனை பிரசார பொதுக்கூட்டங்கள் ஆரணி சைதாப்பேட்டை பஸ் நிறுத்தம் அருகிலும், சேவூர் ஊராட்சியில் பஸ் நிறுத்தம் அருகிலும், எஸ்.வி.நகரம் ஊராட்சியில் பஸ் நிறுத்தம் அருகிலும், குன்னத்தூர் பஜார் வீதிலும், மேல்நகர் ஈஸ்வரன் கோவில் திடலிலும், கண்ணமங்கலம் பிள்ளையார் கோவில் அருகிலும் என 6 இடங்களில் நடைபெற்றது.
கூட்டத்தில் முன்னாள் எம்எல்ஏ தயாநிதி, மாவட்ட துணைச் செயலா் ஜெயராணி ரவி, மாவட்ட பொருளாளா் தட்சிணாமூா்த்தி, ஒன்றியச் செயலா் மோகன், துரைமாமது, சேவூா் ஊராட்சித் தலைவா் தரணி, ஒன்றியக் குழு துணைத் தலைவா் ராஜேந்திரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu