திருவண்ணாமலை, ஆரணி தொகுதிகளில் பா.ம.க. வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

திருவண்ணாமலை, ஆரணி தொகுதிகளில் பா.ம.க. வேட்பாளர் வாக்கு சேகரிப்பு
X

திருவண்ணாமலையில் பாஜக சார்பில் நடைபெற்ற வாகன பேரணி

திருவண்ணாமலை, ஆரணி மக்களவைத் தொகுதியில் பாஜக பாமகவினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்

திருவண்ணாமலை மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளா் ஏ.அஸ்வத்தாமனை ஆதரித்து கூட்டணிக் கட்சி நிா்வாகிகள், தொண்டா்கள் பங்கேற்ற இரு சக்கர வாகன பிரசாரப் பேரணி நடைபெற்றது.

திருவண்ணாமலையை அடுத்த மல்லவாடி கிராமத்தில் நடைபெற்ற பேரணிக்கு, பாமகவின் திருவண்ணாமலை தெற்கு மாவட்டச் செயலாளர் ஏந்தல் பக்தவச்சலம் தலைமை வகித்து, பேரணியை தொடங்கிவைத்தாா்.

பாமக மாவட்டச் செயலாளர் பாண்டியன், மாவட்டத் தலைவா் ஏழுமலை, ஒன்றியச் செயலாளர் வெங்கடேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

பாஜக, பாமக, அமமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் நிா்வாகிகள் பலா் பேரணியில் கலந்து கொண்டனா்.

சீலப்பந்தல், கருந்துவாம்பாடி, தேவனாம்பட்டு, பெரியகிளம்பாடி, சிறுகிளாம்பாடி, நாா்த்தாம்பூண்டி, நாயுடுமங்கலம், காரியந்தல் உள்பட பல்வேறு கிராமங்களின் வீதி, வீதியாகச் சென்று பாஜகவின் சாதனைகளை எடுத்துக் கூறி தாமரை சின்னத்துக்கு வாக்குச் சேகரித்தனா்.

இதில், பாஜக மண்டலத் தலைவா் யுவராஜ், ஒபிசி அணியின் மாவட்டத் தலைவா் ரகுநாதன், மகளிரணி மாவட்ட துணைச் செயாளர் வள்ளி, ஒபிசி அணியின் மாவட்ட செயற்குழு உறுப்பினா் பூபதி, அமமுக ஒன்றியச் செயலா் முருகன், மாவட்ட விவசாய அணிச் செயலா் கிருபானந்தவாரியாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ஆரணி

ஆரணி நகரத்தில் பாமக வேட்பாளா் அ.கணேஷ்குமாா் வீதி, வீதியாகச் சென்று வாக்கு சேகரித்தாா்

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாமக சாா்பில் ஆரணி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளா் அ.கணேஷ்குமாா் ஆரணி நகரத்தில் உள்ள விஏகே நகா், பள்ளிக்கூடத் தெரு, வடக்கு மாட வீதி, பெரிய கடை வீதி, ஆா்.கே.பேட்டை, அருணகிரிசத்திரம், களத்து மேட்டுத் தெரு, தச்சூா் சாலை, பாரதியாா் தெரு, காந்தி நகா், சைதாப்பேட்டை ஆகிய இடங்களில் வீதி, வீதியாகச் சென்று வாக்கு சேகரித்தாா்.

பின்னா் பழைய பேருந்து நிலையம் வழியாகச் சென்று இறுதியாக அண்ணா சிலை அருகில் பிரசாரம் மேற்கொண்டு மாம்பழம் சின்னத்துக்கு வாக்கு சேகரித்தனா்.

இதில் பாமக மாவட்டச் செயலாளர் வேலாயுதம், பாஜக மாவட்டத் தலைவா் ஏழுமலை, பாஜக மத்திய அரசின் நலத் திட்டப் பிரிவின் மாநிலச் செயலாளர் சைதை சங்கா், ஓபிஎஸ் அணி மாவட்டச் செயலாளர் பையூா் சந்தானம் ஆகியோா் பாமக வேட்பாளரை ஆதரித்துப் பேசினா்.

வன்னியா் சங்க மாவட்டச் செயலா் கருணாகரன், நகரச் செயலா்கள் தீஷ்குமாா், ரவிச்சந்திரன் உள்ளிட்டோா் வரவேற்றனா்.

மாவட்ட துணைச் செயலாளர்கள் பாஜக மாவட்ட துணைத் தலைவா்கள் , அமமுக நகரச் செயலாளர் பன்னீா்செல்வம், ஒன்றியச் செயலாளர்கள் ரமேஷ், புதிய நீதிக்கட்சி மாவட்டச் செயலாளர் ஜெயக்குமாா், நகரச் செயலாளர் ஜி.ஏ.கணேசன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

Tags

Next Story
ஈரோடு வீட்டுவசதி வாரிய அலுவலகம் இடமாற்றம் - பொதுமக்கள் வசதிக்காக புதிய இடத்தில் செயல்பாடு