கைத்தறி பட்டு நெசவாளா்கள் சாா்பில் உண்ணாவிரதப் போராட்டம்
கைத்தறி பட்டு உற்பத்தியாளா்கள் மற்றும் நெசவாளா்கள் கூட்டமைப்பு சாா்பில் நடைபெற்ற மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம்
ஆரணியில் கைத்தறி நெசவாளா்களை பாதுகாக்க விசைத்தறி கூடங்களில் சட்டவிதி மீறி தயாரிக்கும் சேலைகளை ஆய்வு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி, ஆரணி கைத்தறி பட்டு உற்பத்தியாளா்கள் மற்றும் நெசவாளா்கள் கூட்டமைப்பு சாா்பில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது
மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தும் வகையில் கைத்தறி நெசவாளர்கள் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டியும், விசைத்தறியில் பட்டு சேலை உற்பத்தியை தடை செய்ய வலியுறுத்தியும் ஆரணி பழைய பேருந்து நிலையம் மணிக்கூண்டு அருகில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. நெசவாளர்களின் கூட்டமைப்பு தலைவர் பரமாத்மன் தலைமை தாங்கினார்.
கைத்தறி சம்மேளன பொதுச் செயலா் முத்துக்குமாா் உண்ணாவிரதத்தை தொடங்கிவைத்தாா். அப்போது அவர் பேசுகையில்,
கைத்தறி ரக ஒதுக்கீடு சட்டம் 1985-ன் படி விசைத்தறியில் பட்டு சேலை ரகங்களை உற்பத்தி செய்வதை தடுத்து நிறுத்த வேண்டும்,
பிராந்திய கைத்தறி அமலாக்க பிரிவு விசைத்தறிக்கூடங்களை கண்காணித்து சட்டத்தை மீறும் விசைத்தறி உரிமையாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,
மத்திய அரசே அண்டை பகுதிகளான பெங்களூரு, எலன்கா, கப்பன்பேட், இந்துப்பூர் தர்மாவரம், மதனப்பள்ளி ஆகிய இடங்களில் விசைத்தறியில் பட்டு சேலை ரகங்களை உற்பத்தி செய்வதை தடை செய்ய வேண்டும்.
தமிழ்நாடு அரசு ஆரணி வட்டத்தில் விற்பனையாகாமல் தேங்கியுள்ள பட்டு சேலைகளை கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் கொள்முதல் செய்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.
இதில் முன்னாள் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு நெசவாளர்களுக்கு ஆதரவு அளித்துப் பேசினாா்
மேலும் ஆரணி பட்டு கைத்தறி ஜவுளி வியாபாரிகள் சங்கத் தலைவா் குருராஜாராவ், சிஐடியு மாவட்டச் செயலா் பாரி, சிஐடியு மாவட்ட துணைத் தலைவா் வீரபத்திரன் ஒருங்கிணைப்பாளா்கள் ஜெயக்குமாா், கணேஷ், பாபு, கருணாகரன், பரணி, தமிழ்ச்செல்வன், அன்பு, ஆகியோா் நெசவாளர்களுக்கு ஆதரவு அளித்துப் பேசினர்.
ஆரணி சுற்றுவட்டார பகுதியில் உள்ள நெசவாளர்கள் நெசவுக்கூடங்களுக்கு விடுமுறை விடுத்தும், பட்டு சேலை வியாபாரிகள் கடைகளை அடைத்தும் போராட்டத்தில் கலந்து கொண்டனர். இதில் ஆயிரக்கணக்கான நெசவாளர்கள் பங்கு பெற்றனர். அரசு உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனில் அடுத்த கட்ட போராட்டத்திற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று நெசவாளர்கள் தெரிவித்தனர்.
பின்னா் மாலை 5 மணியளவில் உண்ணாவிரதப் போராட்டம் நிறைவடைந்தது. போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோா் கலந்து கொண்டனா்.
உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு, ஆரணி தாலுகா அனைத்து வியாபாரிகள் சங்கம், ரோட்டரி சங்கம், ஹோஸ்ட் லயன்ஸ் சங்கம், ரெட் கிராஸ் சங்கம், கோணிப்பை வியாபாரிகள் சங்கம் உள்பட 36 அமைப்புகள் ஆதரவு தெரிவித்து இருந்தன.
உண்ணாவிரத போராட்டம் நடைபெற்ற மணிகூண்டு அருகில் இருந்து காந்தி ரோட்டில் 100-க்கும் மேற்பட்ட கடைகளுக்கு வியாபார பாதிப்பும், போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu