ரேணுகாம்பாள் கோவில் உண்டியலில் ரூ.46 லட்சம் காணிக்கை
ரேணுகாம்பாள் கோவில் உண்டியல் எண்ணும் பணி
கண்ணமங்கலம் அடுத்த படவேடு கிராமத்தில் புகழ்பெற்ற ரேணுகாம்பாள் கோயில் உள்ளது. தொண்டை மண்டலத்து சக்தி தளங்களில் இத்தலம் முக்கியமான ஒன்றாகும். பரசுராம சேத்திரம் என்றும் இத்தளத்துக்கு பெயர் உண்டு
64 சக்தி பீடங்களில் ஒன்றான இக்கோயிலில் கருவறையில் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளுடன் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். சக்தி பீடங்களில் இத்தலம் மிகவும் முக்கியமானது. இங்கு அம்மன் (சிரசு மட்டும்) சுயம்பு மூர்த்தியாக அருள் பாலிக்கிறார்.
இக்கோயிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து தங்கள் பிரார்த்தனை நிறைவேறியுடன் நேர்த்திக்கடனாக உண்டியலில் காணிக்கை செலுத்துவர். இவ்வாறு செலுத்தப்படும் உண்டியல் காணிக்கை இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை எண்ணப்படுவது வழக்கம்.
அதன்படி நேற்று உண்டியலில் கிடைத்த காணிக்கை என்னும் பணி நடைபெற்றது. 11 காணிக்கை உண்டியல்கள் திறக்கும் பணி உதவி ஆணையர் ஜோதிலட்சுமி மேற்பார்வையில் நடைபெற்றது. அதனை தொடர்ந்து உண்டியல் காணிக்கை எண்ணும் பணி செயல் அலுவலர் சிவஞானம், மேலாளர் மகாதேவன், கணக்காளர் சீனிவாசன் மேற்பார்வையில் நடந்தது. 100-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.
இதில் பக்தர்கள் காணிக்கையாக ரூ 46 லட்சத்து 31 ஆயிரத்து 674 ரொக்கமாகவும் தங்கம் 537 கிராமும், வெள்ளி 687 கிராமும் செலுத்தியிருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu