ஆரணியில் 6 தொழிலாளர்களுக்கு கொரோனா: ஓட்டலுக்கு சீல்

ஆரணியில் 6 தொழிலாளர்களுக்கு கொரோனா: ஓட்டலுக்கு சீல்
X

ஆரணியில், 6 தொழிலாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் ஓட்டலுக்கு சீல் வைக்கப்பட்டது.

ஆரணியில் 6 தொழிலாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், ஓட்டலுக்கு சீல் வைக்கப்பட்டது.

ஆரணி நகரில் பழைய பஸ் நிலையம் பின்புறம் உள்ள ஒரு ஓட்டலில் பணிபுரியும் தொழிலாளர்கள் அனைவருக்கும் கடந்த 13-ந் தேதி வரை கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் முடிவுகள் வெளியானது. இதில் ஒரு பெண் தொழிலாளர் உள்பட 6 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது என உறுதி செய்யப்பட்டது.

அதனைத்தொடர்ந்து ஆரணி நகராட்சி அலுவலக மேலாளர் நெடுமாறன், துணை போலீஸ் சூப்பிரண்டு கோட்டீஸ்வரன், தாசில்தார் பெருமாள், வருவாய் ஆய்வாளர் கலைச்செல்வன், கிராம நிர்வாக அலுவலர்கள் ராமச்சந்திரன், புருஷோத்தமன், நகராட்சி ஊழியர்கள் ஒன்று திரண்டு, அந்த ஓட்டலுக்கு சீல் வைத்தனர். மேலும் ஓட்டல் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கும் பணியினை மேற்கொண்டனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!