திருவண்ணாமலை மாவட்டத்தில் விடிய விடிய கனமழை
சாலையில் தேங்கியுள்ள மழை நீர்
திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் கடந்த சில நாட்களாகவே காலை முதல் மாலை வரை கோடை வெயிலை காட்டிலும், வெயில் சுட்டெரித்து வருகிறது. அதேசமயம், மாலை மற்றும் இரவு நேரங்களில் பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. அதன்படி, ஆரணி சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை லேசான காற்றுடன் தொடங்கிய மழை, காலை வரை விடிய விடிய கனமழை பெய்து வருகிறது.
இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. விவசாய நிலங்கள், நீர்நிலைகளில் தண்ணீர் குளம்போல் தேங்கியது. ஆரணி பகுதியில் உள்ள ஏரி, குளங்களில் நீர்நிலைகள் நிரம்பியது.
ஆரணி அருகே குளமாக மாறிய சாலை.
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி பகுதியில் கடந்த 2 நாள்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால், சேவூா்-அடையபலம் சாலையில் சுமாா் ஒரு கி. மீ தொலைவுக்கு மழைநீா் குளம் போல தேங்கியுள்ளது. இதனால், இந்தச் சாலை வழியாக பள்ளி, கல்லூரி மாணவா்கள், பொதுமக்கள், இரு, நான்கு சக்கர வாகனங்கள் பெரும் சிரமத்துடன் சென்று வருகின்றனா்.
இதுதொடா்பாக, அடையபலம் ஊராட்சித்தலைவா், ஆரணி வட்டார வளா்ச்சி அலுவலா் ஆகியோரிடம் பொதுமக்கள் முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் இல்லையாம். எனவே, இந்தப் பகுதியில் புதிதாக சாலை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளனா்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் பெய்த மழையின் அளவு:
திருவண்ணாமலை 4 மி.மீ, செங்கம் 12.8 மி.மீ, போளூர் 50 மி.மீ, ஆரணி 72 மி.மீ, ஜமுனாமரத்தூர் 51.8 மி.மீ, கலசபாக்கம் 55 மி.மீ, தண்ராம்பட்டு 6.4 மி.மீ, செய்யாறு 42 மி.மீ, வந்தவாசி 41 மி.மீ, கீழ்பென்னாத்தூர் 19 மி.மீ, வெம்பாக்கம் 24 மி.மீ, சேத்துப்பட்டு 45.4 மிமீ. மாவட்டம் முழுவதும் மழையின் அளவு 423.4 மி.மீ. பதிவாகி இருந்தது.
அதிகபட்சமாக ஆரணியில் 72 மி.மீ. மழை பதிவாகி இருந்தது. இந்நிலையில், நேற்று இரவும் ஆரணி சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu