ஆரணி பகுதியில் பலத்த மழை; மூதாட்டி பலி

ஆரணியை அடுத்த முள்ளிப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் துரைசாமி. இவருடைய மனைவி ஜெகதாம்பாள் (வயது 92). இவர்களுக்கு நான்கு மகன்கள் உள்ளனர். அவர்கள் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர். துரைசாமி இறந்துவிட்டதால் ஜெகதாம்பாள் ஓட்டு வீட்டில் தனியாக வசித்து வந்தார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு ஆரணி பகுதியில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. நேற்று காலை நிலவரப்படி ஆரணி பகுதியில் 74 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. இந்த கனமழை காரணமாக ஜெகதாம்பாளின் வீட்டின் சுவர்கள் இடிந்து விழுந்தன. அப்போது வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த அவர் இடிபாட்டில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் முனியாண்டி ஆரணி தாசில்தார் செந்தில்குமாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். ஜெகதாம்பாளின் உடலை பிரேத பரிசோதனை செய்ய வேண்டாம் என்றும், அரசு வழங்கும் நிவாரண உதவி ஏதும் தேவையில்லை எனக் கூறி அவரது உடலை மகன்கள் மற்றும் உறவினர்களே அடக்கம் செய்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu