ஆரணி அருகே மின்னல் தாக்கி 3 பசுக்கள் பலி

ஆரணி அருகே மின்னல் தாக்கி 3  பசுக்கள் பலி
X
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே, மின்னல் தாக்கி மூன்று பசுக்கள் உயிரிழந்தன.

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே உள்ளது, கண்ணமங்கலம் கிராமம். நேற்றிரவு இப்பகுதியில் ஒருமணி நேரம் இடி, மின்னலுடன் கன ழை பெய்தது.

அப்போது, மின்னல் தாக்கியதில், அப்பகுதியில் இருந்த 3 பசுக்கள் உயிரிழந்தன. அதேபோல், அப்பகுதியில் இருந்த வீடு ஒன்றில், மின்சார ஒயர்களும் திடீரென எரிந்தன. வீட்டில் இருந்த பொன்மொழி என்பவருக்கு, மின்னல் தாக்கி இரு கால்கள் செயலிழந்தன.

தகவலறிந்த கிராம நிர்வாக அலுவலர் நித்தியானந்தம், வார்டு கவுன்சிலர்கள் ஆகியோர், நேரில் சென்று பார்வையிட்டனர். வட்டாட்சியர், மருத்துவர்கள், போலீசாருக்கு இதுபற்றி தகவல் தெரிவித்தனர். இரு கால்களையும் இழந்த பெண்மணி, உயர் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!