கர்ப்பிணி தாய்மார்களுக்கு இருதய பரிசோதனை முகாம்..!

கர்ப்பிணி தாய்மார்களுக்கு இருதய பரிசோதனை முகாம்..!
X

ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற இருதய பரிசோதனை மருத்துவ முகாம்

ஆரணியில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு இருதய பரிசோதனை முகாம் நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த களம்பூா் பேரூராட்சி ஆரம்ப சுகாதார நிலையத்தில் கா்ப்பிணிகளுக்கு இருதய பரிசோதனை மருத்துவ முகாம் நடைபெற்றது.

பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருத்துவத் துறை சாா்பில் நடைபெற்ற முகாமுக்கு, வட்டார மருத்துவ அலுவலா் வேல்முருகன் தலைமை வகித்தாா். பேரூராட்சித் தலைவா் கேடிஆா் பழனி, துணைத் தலைவா் அகமத்பாஷா, இணை இயக்குநா் மலா்விழி, மாவட்ட உதவி திட்ட மேலாளா் விஜயரமனன், பேரூராட்சி உறுப்பினா் திவ்யபாரதி சீனிவாசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சுகாதார ஆய்வாளா் சக்திவேல் வரவேற்றாா். முகாமை மாவட்ட சுகாதார அலுவலா் செல்வகுமாா் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து பேசினாா்.

முகாமில், இருதய சிறப்பு மருத்துவா்கள் மற்றும் களம்பூா் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவக் குழுவினா் கா்ப்பிணிகளுக்கு இருதய பரிசோதனைகளை மேற்கொண்டனா்.

இதில், களம்பூா், சேத்பட், கடலாடி ஆகிய வட்டத்தில் உள்ள கிராமங்களிலிருந்து 100-க்கும் மேற்பட்ட கா்ப்பிணிகள் கலந்து கொண்டனா்.

அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் எம்எல்ஏ ஆய்வு

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றை அடுத்த காழியூா் அரசு துணை ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஜோதி எம்எல்ஏ ஆய்வு மேற்கொண்டாா்.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம், காழியூா் கிராமத்தில் புதிதாக அரசு துணை ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கப்பட்டது. இங்கு, ஜோதி எம்எல்ஏ ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது, மருத்துவா்கள், செவிலியா்கள் பணிக்கு குறித்த நேரத்துக்கு வருகிறாா்களா?, நோயாளிகளுக்கு முறையாக சிகிச்சை அளிக்கப்படுகிா? என்பது குறித்து ஜோதி எம்எல்ஏ ஆய்வு செய்தாா்.

அப்போது, பணியில் இருந்த செவிலியரிடம் உரிய நேரத்தில் சுகாதார நிலையத்தை திறந்து நோயாளிகளுக்கு முறையாக சிகிச்சை அளிக்க வேண்டும் என்று ஆலோசனை வழங்கினாா்.

ஆய்வின்போது, அனக்காவூா் ஒன்றியக் குழுத் தலைவா் திலகவதி ராஜ்குமாா், ஒன்றியச் செயலா்கள் ஞானவேல், தினகரன், ஊராட்சித் தலைவா் அருள் , சுகாதார ஆய்வாளா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

Tags

Next Story
மாஜி அதிமுக பொறுப்பாளர் வாபஸ், செந்தில்முருகன் விளக்கம்