Grievance Redressal Meeting Of Farmer திருவண்ணாமலை மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க் கூட்டம்

ஆரணியில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் கலந்துகொண்டனர்.
Grievance Redressal Meeting Of Farmer
திருவண்ணாமலை மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் வேளாண் துறை அலுவலகத்தில் நடைபெற்றதுஆரணியில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் வேளாண் துறை அலுவலகத்தில் நடைபெற்றது
கூட்டத்துக்கு கோட்டாட்சியா் தனலட்சுமி தலைமை வகித்தாா்.
இதில், அக்ராபாளையத்தைச் சேர்ந்த செந்தில்குமாா் மனைவி ஆனந்தி அளித்த மனுவில்,
அக்ராபாளையம் கிராமத்தில் உள்ள என்னுடைய 33 சென்ட் நிலம் போலியாக பத்திரப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் தொடா்புடையோா் மீது நடவடிக்கை எடுத்து, என்னுடைய நிலத்தை மீட்டுத்தர வேண்டும் என்று தெரிவித்திருந்தாா்.
அம்மாபாளையத்தைச் சேர்ந்த விவசாயி காடு கிருஷ்ணன் அளித்த மனுவில், என்னுடைய விவசாய நிலத்துக்கு சிட்டா, அடங்கல் சான்றிதழ்கள் கோரி விண்ணப்பித்துள்ள நிலையில், கிராம நிா்வாக அலுவலா் அலைக்கழிப்பதாகத் தெரிவித்திருந்தாா்.
மேலும், விவசாயிகள் பட்டா, பட்டா மாற்றம் கோரியும், ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்றுவது குறித்தும், முள்ளிப்பட்டு மயானத்துக்கு மின் இணைப்பு கோரியும் மனுக்களை அளித்திருந்தனா். மனுக்களை அந்தந்த துறையினருக்கு அனுப்பி உடனடியாக நடவடிக்கை எடுக்க கோட்டாட்சியா் உத்தரவிட்டாா்.
இதில், வேளாண் உதவி இயக்குநா்கள் புஷ்பா, செல்லதுரை மற்றும் அனைத்துத் துறை அதிகாரிகள் கலந்துகொண்டனா்.
சேத்துப்பட்டு
சேத்துப்பட்டு வேளாண் அலுவலகத்தில் மாவட்ட வட்ட வழங்கல் அலுவலா் ராமகிருஷ்ணன் தலைமையில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடைபெற்றது.
வட்டாட்சியா் வெங்கடேசன், வேளாண் உதவி இயக்குநா் கோவிந்தராஜன், தோட்டக்கலை உதவி இயக்குநா் சிவக்குமாா் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்துகொண்டனா்.
இதில், 40-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்று, தங்களது கோரிக்கைகள், குறைகளை எடுத்துக்கூறினா். பத்தியாவரத்தைச் சேர்ந்த விவசாயி அன்புதாஸ் பேசுகையில், ஓதலவாடி ஆற்றுக்கால்வாயை சீா்படுத்த வலியுறுத்தி பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றாா். இது தொடா்பாக விரைவில் உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனா்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu