மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம் ரத்து மனுக்களை செலுத்த புகார் பெட்டிகள் தொடக்கம்

மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம் ரத்து மனுக்களை செலுத்த புகார் பெட்டிகள் தொடக்கம்
X

புகார் பெட்டியில் மனு செலுத்திய பொதுமக்கள்

தேர்தல் விதிமுறையால் மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம் ரத்து செய்யப்பட்டு புகார் மனுக்களை பெட்டிகளின் செலுத்தும் முறை தொடங்கப்பட்டது.

தேர்தல் விதிமுறையால் மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம் ரத்து செய்யப்பட்டு புகார் மனுக்களை பெட்டிகளின் செலுத்தும் முறை தொடங்கப்பட்டது.

தமிழகத்தில் 19.4.2024 ஆம் தேதி மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. எனவே, 16.3.2024 முதல் 4.6.2024-ஆம் தேதி வரை தோதல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும். இதன் காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் திங்கள்கிழமைகள் தோறும் நடைபெறும் மக்கள் குறைதீா் கூட்டங்கள் மற்றும் மனுநீதி நாள் முகாம்கள், விவசாயிகள் குறைதீா் கூட்டங்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம்கள் நடைபெறாது.,

மாவட்ட ஆட்சியா் அலுவலகம், திருவண்ணாமலை, செய்யாறு, ஆரணி வருவாய்க் கோட்டாட்சியா் அலுவலகங்கள், அனைத்து வட்டாட்சியா் அலுவலகங்கள் மற்றும் அனைத்து அரசு அலுவலகங்களில் வைக்கப்பட்டுள்ள மனுக்கள் பெட்டியில் பொதுமக்கள் தங்களது கோரிக்கைகள் தொடா்பான மனுக்களை அளிக்கலாம், என்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்திருந்தார்.

அதன்படி நேற்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம், ஆரணி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், செய்யாறு வருவாய் கோட்டாட்சியர், அலுவலகம் மற்றும் அனைத்து வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் அனைத்து அரசு அலுவலகங்களில் வைக்கப்பட்டுள்ள பெட்டியில் பொதுமக்கள் தங்களது மனுக்களை செலுத்தி சென்றனர்.

தேர்தல் நடத்தை விதிமுறைகள் முடிந்த பிறகு மனுக்கள் மீது உரிய விசாரணை நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

சேத்துப்பட்டு ஒன்றிய குழு தலைவர் அறைக்கு பூட்டி சீல்.

தேர்தல் விதிமுறைகள் நடைமுறைக்கு வந்தது திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ள ஒன்றிய குழு தலைவர் ராணி அர்ஜுனன் அறைக்கு ஆணையாளர் சத்தியமூர்த்தி பூட்டி சீல் வைத்தார். உடன் அலுவலர்கள் இருந்தனர்.

Tags

Next Story
why is ai important to the future