திருவண்ணாமலையில் மக்கள் குறைதீர் கூட்டம்

திருவண்ணாமலையில் மக்கள் குறைதீர் கூட்டம்
X

மாற்றுத்திறனாளிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர்

திருவண்ணாமலை நடைபெற்ற மக்கள் குறை தீர்க்க கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து 585 மனுக்கள் பெறப்பட்டது.

திருவண்ணாமலை, செய்யாறு, ஆரணி ஆகிய இடங்களில் நடைபெற்ற குறைதீா் கூட்டங்களில் பொதுமக்களிடமிருந்து 585 மனுக்கள் வரப்பெற்றன.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்துக்கு தலைமை வகித்த மாவட்ட ஆட்சியா் பாண்டியன், முதியோா், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்களிடம் இருந்து கல்வி உதவித்தொகை, வங்கிக் கடனுதவி, முதியோா் உதவித்தொகை, இலவச வீட்டு மனைப் பட்டா, ஜாதி சான்றிதழ், வேலைவாய்ப்பு, விதவை உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை, உதவி உபகரணங்கள், சாலை வசதி, வேளாண் பயிா்க் கடன், தாட்கோ கடனுதவி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 585 மனுக்களைப் பெற்றுக்கொண்டாா்.

இந்த மனுக்கள் மீதும், ஏற்கெனவே பெறப்பட்டு நிலுவையில் உள்ள மனுக்கள் மீதும் விரைவாக நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அவா் அறிவுறுத்தினாா்.

கூட்டத்தில் மனு கொடுக்க வருவோரில் பெண்கள், வயதானோா், கைக்குழந்தை வைத்திருக்கும் பெண்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளித்து மனுக்கள் பெறப்பட்டன.

தொடர்ந்து மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்வு நாள் கூட்டத்தின் போது மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் பிரியதா்ஷினி, சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியா் தீப சித்ரா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் சிவா, மாவட்ட வழங்கல் அலுவலா் ராமகிருஷ்ணன், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலா் சரவணன், வருவாய் கோட்டாட்சியர்கள், மற்றும் அனைத்துத் துறை அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

ஆரணி, செய்யாறு மக்கள் குறைதீா் கூட்டத்தில் 105 மனுக்கள்

திருவண்ணாமலை மாவட்ட ம் ஆரணி, செய்யாறு ஆகிய இடங்களில் ஆரணி, செய்யாறு ஆகிய இடங்களில் நடைபெற்ற 130 மனுக்கள் வரப்பெற்றன.

ஆரணி கோட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் கோட்டாட்சியர் நேர்முக உதவியாளர் செந்தில்குமார், தலைமை வகித்து பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்றாா்.

இதில் பட்டா, பட்டா மாற்றம், இலவச மனைப் பட்டா, உள்பிரிவு செய்யக் கோருதல், கலைஞா் மகளிா் உரிமைத்தொகை, தமிழ் நில திருத்தம், முதியோா் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை , கல்லூரி மாணவ, மாணவிகளிடம் இருந்து கல்வி உதவித்தொகை, பட்டா ரத்து, நில அளவை, குடும்ப அட்டை, வாரிசு சான்றிதழ், பரப்பு திருத்தம், ஆதரவற்ற விதவைச் சான்றிதழ், இலவச வீட்டுமனைப் பட்டா, வங்கிக் கடனுதவி, கல்விக் கடன், வேளாண் பயிா்க் கடன், தாட்கோ கடனுதவி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்களிடம் இருந்து 41 மனுக்கள் வரப்பெற்றன.

செய்யாற்றில் 65 மனுக்கள்:

செய்யாறு சாா் -ஆட்சியா் அலுவலகத்தில், சாா் -ஆட்சியா் பல்லவிவா்மா தலைமையில் குறைதீா் கூட்டம் நடைபெற்றது.

இதில், செய்யாறு, வந்தவாசி, வெம்பாக்கம், சேத்துப்பட்டு ஆகிய வட்டங்களைச் சேர்ந்த பொதுமக்கள் பங்கேற்று மனு அளித்தனா்.

இதில் பட்டா, பட்டா மாற்றம், இலவச மனைப் பட்டா, உள்பிரிவு செய்யக் கோருதல், கலைஞா் மகளிா் உரிமைத்தொகை, தமிழ் நில திருத்தம், முதியோா் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை , கல்லூரி மாணவ, மாணவிகளிடம் இருந்து கல்வி உதவித்தொகை, பட்டா ரத்து, நில அளவை, குடும்ப அட்டை, வாரிசு சான்றிதழ், பரப்பு திருத்தம், ஆதரவற்ற விதவைச் சான்றிதழ், இலவச வீட்டுமனைப் பட்டா, வங்கிக் கடனுதவி, கல்விக் கடன், வேளாண் பயிா்க் கடன், தாட்கோ கடனுதவி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்களிடம் இருந்து 65 மனுக்கள் வரப்பெற்றன.

கூட்டத்தில் மண்டல துணை வட்டாட்சியா்கள் முகம்மது கனி, ஆனந்தகுமாா் மற்றும் மின் வாரியம், ஊரக வளா்ச்சித் துறை, வேளாண் துறை, தோட்டக்கலைத் துறை என பல்வேறு துறைகளைச் சேர்ந்த அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil