திருவண்ணாமலை மாவட்ட தனியார் கல்லூரிகளில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாக்கள்
மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கிய திருவள்ளுவர் பல்கலைக்கழக துணை வேந்தர் ஆறுமுகம்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் தனியார் கல்லூரிகளில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை கலை அறிவியல் கல்லூரியின் 18 ஆவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
விழாவிற்கு கல்லூரி தாளாளர் பழனி தலைமை வகித்தார். கல்லூரி செயலாளர் விஜய் ஆனந்த் பொருளாளர் ஸ்ரீதர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் ஆனந்த்ராஜ் அனைவரையும் வரவேற்றார்.
வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழக துணைவேந்தர் ஆறுமுகம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பேசினார்.
விழாவில் இளங்கலை பட்டப் படிப்பில் 17 துறைகளை சேர்ந்த 1655 மாணவ மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன . இதில் மூன்று பேர் தங்கப்பதக்கமும் 21 பேர் பல்கலைக்கழக தரவரிசை பட்டியலிலும் இடம் பிடித்துள்ளனர் .
விழாவில் கல்லூரி துறை தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவ மாணவிகள் ,பெற்றோர்கள் உள்பட பலரும் கலந்து கொண்டனர்.
மகளிர் கல்லூரி
புதுப்பாளையம் அருகே உள்ள இதயா மகளிர் கலைக் கல்லூரியில் நடைபெற்ற 12 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் 592 மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டது.
விழாவிற்கு கல்லூரியின் தலைவர் அருள் மேரி தலைமை தாங்கினார்.
செயலாளர் பாத்திமா மேரி முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் லூர்து மேரி அனைவரையும் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக புதுப்பாளையம் வன சரக அலுவலர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் சென்னை லயோலா கல்லூரி முதல்வர் பங்கிராஸ் ஆகியோர் கலந்துகொண்டு மாணவிகளுக்கு பட்டங்கள் மற்றும் பதக்கங்களை வழங்கினர்.
இவ்விழாவில் இளங்கலை பட்டப் படிப்பில் 10 துறைகளை சேர்ந்த 598 மாணவிகளுக்கும், முதுகலை பட்டப்படிப்பு பயின்ற 22 மாணவிகளுக்கும் பட்டம் வழங்கப்பட்டது . திருவள்ளுவர் பல்கலைக்கழக தரவரிசையில் இடம் பெற்றதற்கான ஐந்து மாணவிகளுக்கு சான்றிதழ்களும் பதக்கங்களும் வழங்கப்பட்டது.
இவ்விழாவில் கல்லூரி பேராசிரியர்கள், மாணவிகள், பெற்றோர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஆரணி
ஆரணி அருகே குன்னத்தூர் கிராமத்தில் உள்ள ஸ்ரீ பாரதி மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் பன்னிரண்டாவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
விழாவிற்கு கல்லூரி தாளாளர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் தர்மராஜ் அனைவரையும் வரவேற்றார்.
நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் தலைமைச் செயலாளர் ,எழுத்தாளர் இறையன்பு கலந்து கொண்டு மாணவிகளுக்கு பட்டங்கள் மற்றும் பதக்கங்களை வழங்கினார்.
இளங்கலை மற்றும் முதுகலை படித்த சுமார் 450 மாணவிகளுக்கு பட்டப்படிப்பு சான்றுகள் வழங்கப்பட்டது.
இவ்விழாவில் பேசிய முன்னாள் தலைமைச் செயலாளர் இறையன்பு , மாணவிகளுக்கு கல்வியின் அவசியத்தையும் எதிர்கால சவால்களை பற்றியும் நம்பிக்கையூட்டும் விதமாக எடுத்துரைத்து பேசினார்.
நிகழ்ச்சியில் நகர மன்ற உறுப்பினர் ராமகிருஷ்ணன் ,மற்றும் கல்லூரி பேராசிரியர்கள், , பெற்றோர்கள் ,துறை தலைவர்கள், கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu