ஆரணி காவல் நிலையத்தில் விநாயகர் சதுர்த்தி ஆலோசனைக் கூட்டம்

ஆரணி காவல் நிலையத்தில் விநாயகர் சதுர்த்தி ஆலோசனைக் கூட்டம்
X

சிறப்பு ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய டிஎஸ்பி

ஆரணி காவல் நிலையத்தில் விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

ஆ ரணி காவல் நிலையத்தில் விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நகர காவல் நிலையத்தில் விநாயக சதுர்த்தி முன்னிட்டு விநாயகர் சிலைகள் வைப்பது வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து சிறப்பு ஆலோசனை கூட்டம் டி.எஸ்.பி.ரவிச் சந்திரன் தலைமையில் நடைபெற்றது.

மேலும் ஆரணி விநாயகர் சிலை வைக்க விரும்பும் நபர்கள் முறைப்படி வருவாய் கோட்டாட்சியர் மற்றும் காவல் துறை ஆகியோரிடம் முறையாக அனுமதி பெற வேண்டும். மேலும் ஒலிபெருக்கி அமைப்பது தீப்பிடிக்காத பொருட்களால் பந்தல் அமைக்கவும் மின்விளக்கு அமைக்க முறைப்படி மின்சார துறையிடம் முன் அனுமதி பெற வேண்டும். மேலும் களி மண்ணில் சிலைகள் அமைக்க வேண்டும் நச்சுத்தன்மை கொண்ட சாயங்கள் பூசுவதைதவிர்க்கவேண்டும். மருத்துவ முதலுதவி சாதனங்கள் பந்தலில் வைத்திருக்க வேண்டும்.

அனுமதி வழங்கபட்ட வரையுறுக்கபட்ட வரையில் விநாயகர் சிலைகள் வைக்க வேண்டும். ஒலி பெருக்கியை குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே பயன்படுத்த வேண்டும் மத ஸ்தலங்கள் மருத்துவமனைகள் கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட பகுதிகளில் சிலைகள் அமைக்க கூடாது. சிலைகள் கரைக்கும் இடங்கள் சிலைகள் மூழ்கும் அளவிற்கு தண்ணீர் இருக்க வேண்டும் 5 நாட்களுக்குள் சிலையை கரைக்கவேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகளையு ம் வழிகாட்டி நெறிமுறைகளையும் காவல் துணை கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன் கூறினார்.

மேலும் விநாயகர் சிலைகள் வைக்கும் பந்தல்களில் கண்காணிப்பு கேமரா வைப்பது தொடர்பாகவும் எடுத்துரைக்கப்பட்டது. இதில் காவல் ஆய்வாளர் விநாயக மூர்த்தி உதவி காவல் ஆய்வாளர் சுந்தரேசன், இந்து முன்னணி அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!