ஆரணியில் வெவ்வேறு வழக்கில் மூன்று பெண்கள் உட்பட நான்கு பேருக்கு ஆயுள் தண்டனை
ஆரணியில், நான்கு பேருக்கு ஆயுள் தண்டனை (கோப்பு படம்)
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே கண்ணமங்கலம் பேரூராட்சி வளாகத்தில் வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் கிராமத்தை சேர்ந்த திலகவதி வேலூர் மாவட்டம் கணியம்பாடி ஓன்றியத்தை சேர்ந்த சின்னபாலபாக்கம் கிராமத்தை சேர்ந்த கார்த்தி என்பவருக்கு கடந்த 7 ஆண்டுக்கு முன்பு திருமணமாகி சபரி என்ற மகன் உள்ளார்.
கடந்த 2 ஆண்டுக்கு முன்பு கார்த்தி உடல்நிலை சரியில்லாமல் இறந்து விட்டதால் திலகவதி தன்னுடைய சகோதிரிகளான கவிதா பாக்கியலட்சுமி ஆகியோருடன் வேலூர் மாவட்டம் அரியூர் கிராமத்தில் தங்கி வசித்து வந்தார். திலகவதி மாந்தரீகத்தில் மிகவும் ஈடுபாடுடன் இருப்பவராக கூறப்படுகிறது.
இந்நிலையில் தன்னுடைய ஒரே மகன் சபரி என்பவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் தன்னுடைய மகனுக்கு பேய் பிடித்துள்ளதாகவும், வந்தவாசியில் உள்ள சாமியாரிடம் அழைத்துச் செல்ல ஆட்டோவில் செல்லும்போது கண்ணமங்கலம் பேருந்து நிலையத்தில் இறங்கியதாகவும், சிறுவன் சபரியை பேய்தாக்கி உள்ளதாக கூறி சிறுவனைத் தாய் திலகவதி மற்றும் சகோதரி கவிதா பாக்கியலட்சுமி ஆகிய பெண்கள் சிறுவன் சபரியை கொலை செய்தனர்.
பேருந்து நிலையத்தில் உள்ளவர்களின் தகவலின் பெயரில் கண்ணமங்கலம் போலீசார் சிறுவனின் சரணத்தை மீட்டு திலகவதி கவிதா பாக்கியலட்சுமி ஆகிய மூன்று பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
அதேபோல கடந்த 4.11.22 ஆம் ஆண்டு ஆரணி அருகே காங்கிரந்தல் கிராமத்தை சேர்ந்த ஜெயசுதாவிற்கு திருமணமாகி ஏனோக்ராஜ் என்ற மகனுடன் கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த போது ஆரணி அருகே சேவூர் கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளி மாணிக்கம் என்பவருடன் கள்ளதொடர்பு ஏற்பட்டு சேவூர் கிராமத்தில் தனியாக வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில் கள்ளக்காதலில் கசப்பு ஏற்பட்டு விரிசல் அடைந்த காரணத்தினால் கூலி தொழிலாளி மாணிக்கம் ஜெயசுதா ஆகியோர் குழந்தையை கொடுமைப்படுத்தியுள்ளனர். இதில் குழந்தை படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து ஆரணி தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து கூலி தொழிலாளி மாணிக்கத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த இரு சம்பவம் தொடர்பாக வழக்குகள் ஆரணி நீதிமன்றத்தில் தீர்ப்பு
இந்நிலையில் இரு சம்பவம் வழக்கு ஆரணி நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றது. இதில் நேற்று ஆரணி நீதிமன்ற நீதிபதி பேய் பிடித்ததாக கூறி மகனை கழுத்து நெறித்து கொலை செய்த வழக்கில் திலகவதி கவிதா பாக்கியலட்சுமி ஆகிய 3 பெண்களுக்கு 14 ஆண்டு ஆயுள் தண்டனையும் ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தும் குழந்தையை கொடுமைபடுத்தி கொலை செய்த வழக்கில் கூலி தொழிலாளி மாணிக்கத்திற்கு 14 ஆண்டு ஆயுள் தண்டனை குழந்தை துன்புறுத்தல் 10 ஆண்டு உள்ளிட்ட 24 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து நீதிமன்ற நீதிபதி ஒரே நாளில் 2 வழக்கில் 3 பெண்கள் உட்பட 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu