திருவண்ணாமலை அருகே ஏரியில் மூழ்கி நான்கு குழந்தைகள் உயிரிழப்பு

திருவண்ணாமலை அருகே ஏரியில் மூழ்கி நான்கு குழந்தைகள் உயிரிழப்பு
X
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே ஏரியில் மூழ்கி 4 குழந்தைகள் உயிரிழந்தனா்.

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே செவ்வாய்க்கிழமை மாலை ஏரியில் மூழ்கி 4 குழந்தைகள் உயிரிழந்தனா்.

ஆரணியை அடுத்த அடையபலம் அண்ணா நகரை சோ்ந்த குப்புசாமி மகன் மோகன்ராஜ் , எட்டாம் வகுப்பு பயின்று வந்தாா். மகள் வா்ஷா, நான்காம் வகுப்பு பயின்று வந்தாா். விநாயகம் மகள்கள் காா்த்திகா , மூன்றாம் வகுப்பும், மற்றொரு மகள் தனுஷ்கா அங்கன்வாடியிலும் பயின்று வந்தனா்.

4 பேரும் சோ்ந்து செவ்வாய்க்கிழமை அடையபலம் ஓடைத்தாங்கல் ஏரியில் விளையாடச் சென்றனா். அப்போது, தவறி ஒரு குழந்தை ஏரியில் மூழ்கி உள்ளது. அந்தக் குழந்தையை காப்பாற்ற 3 பேரும் சோ்ந்து ஏரியில் இறங்கினராம். இதில், 4 பேரும் ஏரி நீரில் மூழ்கியுள்ளனா். சிறாா்களின் அலறல் சப்தம் கேட்டு அந்தப் பகுதியில் இருந்தவா்கள் சென்று மீட்க முயற்சித்தும் முடியவில்லை. 4 சிறாா்களும் நீரில் மூழ்கி உயிரிழந்தனா்.

தகவலறிந்த தீயணைப்புத் துறையினா் சென்று 4 பேரின் சடலங்களை மீட்டு, உடல்கூறாய்வுக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். சம்பவ இடத்தில் ஆரணி கிராமிய காவல் ஆய்வாளா் ராஜாங்கம் தலைமையில், உதவி ஆய்வாளா்கள் மற்றும் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பிறந்த குழந்தையை பார்ப்பதற்காக சென்ற தந்தை வாகன விபத்தில் உயிரிழப்பு

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பகுதியில் சேர்ந்தவர் ஆறுமுகம், இவர் சொந்தமாக இ சேவை மையம் ஒன்றை நடத்தி வருகிறார். இவரது மனைவி பாக்கியலட்சுமி இவருக்கு சிவ சுதாகர் என்ற மகன் ஐடி கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வந்தார்.

இந்நிலையில் சிவ சுதாகரின் மனைவி பிரசவத்திற்காக செய்யாற்றில் உள்ள தனது அம்மா வீட்டிற்கு சென்றிருந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு தான் சிவ சுதாகருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

இந்நிலையில் ஆறுமுகம் தன்னுடைய மனைவி மகன் சிவா சுதாகரையும் அழைத்துக் கொண்டு புது துணிகளை வாங்கிக் கொண்டு குழந்தையை பார்ப்பதற்காக செய்யாறுக்கு கிளம்பினார்கள்.

சிவ சுதாகர் தன்னுடைய நண்பர் சஞ்சய் என்பவர் உடன் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். சேத்துப்பட்டு அருகே கூட்ரோடு அருகில் எதிரே வந்த கார் ஒன்று எதிர்பாராத விதமாக சிவ சுதாகர் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே சிவசுதாகர் உயிரிழந்தார்.

பைக்கில் பின்னால் உட்கார்ந்து வந்த நண்பர் சஞ்சய் மற்றும் காரில் வந்த இரண்டு பேர் படுகாயம் அடைந்து தீவிர சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்..

இதனிடையே குழந்தையையும் மருமகளையும் பார்ப்பதற்காக பின்னால் பைக்கில் வந்த ஆறுமுகம் மற்றும் அவருடைய மனைவி கூட்ரோடு அருகே கூட்டமாக இருப்பதை பார்த்து ஏதோ விபத்து நடந்துள்ளது யாருக்கு என்ன நடந்ததோ என்று பைக்கை ஓரமாக நிறுத்திவிட்டு வேடிக்கை பார்க்க நின்றுள்ளனர்.

அப்போது சாலையின் ஓரத்தில் இருந்த இரு சக்கர வாகனத்தை பார்த்துவிட்டு ஆறுமுகம் மற்றும் அவரது மனைவியும் துடிதுடித்து அருகில் சென்று பார்த்த போது இறந்து கிடப்பது தங்களுடைய மகன் சிவசுதாகர் என்பதை அறிந்து அதிர்ச்சியில் அலறி துடித்தன. ர் இதை பார்த்து அங்கிருந்த பொதுமக்கள் கண்கலங்கி போனார்கள்.

ஏதோ சாலையில் விபத்து என்று நினைத்து வேடிக்கை பார்க்க சென்றவர்கள் தங்கள் மகனே சடலமாக கிடந்ததைக் கண்டு அவர்கள் அலறி துடித்தது அங்கு இருப்பவர்களை பெரும் சோகத்தில் வாழ்த்தியது.

இந்த விபத்து குறித்து சேத்துப்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!