ஆரணி அருகே ரயில்வே சுரங்கப்பாதை அமைக்க முன்னாள் அமைச்சர் எதிர்ப்பு

ஆரணி அருகே ரயில்வே சுரங்கப்பாதை அமைக்க முன்னாள் அமைச்சர் எதிர்ப்பு
X

கோப்பு படம்

கண்ணமங்கலம் அடுத்த ஒன்னுபுரம் ரயில்வே கேட் ரயில்வே சுரங்கப்பாதை அமைக்க முன்னாள் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் எதிர்ப்பு

கண்ணமங்கலம் அடுத்த ஒன்னுபுரம் ரயில்வே கேட் அருகே சுரங்கப்பாதை அமைக்க அளவீடு செய்யும் பணிகள் நடந்தது. வேலூர் ரயில்வே ஆய்வாளர் தீபக் தலைமையில் குழுவினர் ஆய்வு செய்தனர்.

அப்போது முன்னாள் அமைச்சர ஆரணி சட்டமன்ற உறுப்பினர் சேவூர் ராமச்சந்திரன் மற்றும் ஒன்னுபுரம் தலைவர் மாவட்ட கவுன்சிலர் ஆகியோர் அப்பகுதி கிராமத்து மக்களுடன் வந்து அதிகாரிகளிடம் கோரிக்கை மனுவை அளித்தார்.

அதில் இப்பகுதியில் விவசாயம் நிறைந்த பகுதி இங்கு 4 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்படுகிறது. பக்கத்தில் உள்ள சிறு கிராமங்களுக்கு மக்கள் தினமும் நெல், கரும்பு, தென்னை , விவசாயத்திற்கு தேவையான பொருட்கள் ஆகியன இவ்வழியே தான் எடுத்து செல்ல வேண்டும். சுரங்கப்பாதை அமைத்தால் லாரி போன்ற கனரக வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்படும். மழைக் காலங்களில் இயங்கும்தேங்கும் நீரினால் இவ்வழியை பயன்படுத்த கிராமவாசிகளுக்கு சிரமம் ஏற்படும். எனவே சுரங்கப்பாதைக்கு பதில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என கூறினார்.

Tags

Next Story
the future of ai in healthcare