திருவண்ணாமலையில் முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவு நாள் அமைதி பேரணி

திருவண்ணாமலையில் முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவு நாள் அமைதி பேரணி
X

திருவண்ணாமலையில் கருணாநிதியின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய திமுகவினர்.

திருவண்ணாமலையில் கருணாநிதி நினைவு நாளையொட்டி அமைதி பேரணியுடன் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது

திருவண்ணாமலையில் கருணாநிதி நினைவு நாளையொட்டி காந்தி சிலையிலிருந்து அமைதி பேரணி புறப்பட்டு அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும், திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவராக இருந்தவருமான கருணாநிதியின் 6 ஆம் ஆண்டு நினைவு நாள் தமிழகம் முழுவதும் இன்று அனுசரிக்கப்படுகிறது.

அதன்படி திருவண்ணாமலை தெற்கு மற்றும் வடக்கு மாவட்ட திமுக சார்பில் மாவட்டத்தில் உள்ள அனைத்து நகராட்சி , ஒன்றியம் ,பேரூராட்சி, ஊராட்சி என அனைத்து பகுதிகளிலும் கருணாநிதி நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.

திருவண்ணாமலை நகர திமுக சார்பில் கருணாநிதியின் 6 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு காந்தி சிலையிலிருந்து அமைதி பேரணி புறப்பட்டு வேலூர் சாலையில் உள்ள கருணாநிதி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் மாநில மருத்துவ அணி துணைத்தலைவர் எ.வ.வே.கம்பன், சட்டமன்ற உறுப்பினர்கள் கிரி, சரவணன், ஜோதி, அம்பேத்குமார், திருவண்ணாமலை நகர மன்ற தலைவர் நிர்மலா வேல்மாறன், நகர செயலாளர் கார்த்தி வேல்மாறன் , முன்னாள் நகர மன்ற தலைவர் ஸ்ரீதரன், மாவட்டத் துணைச் செயலாளர் பிரியா விஜயரங்கன், நகர மன்றத் துணைத் தலைவர் ராஜாங்கம், நகர மன்ற உறுப்பினர்கள், நகர அமைப்பாளர்கள், கழக உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். பின்னர் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

கீழ்பெண்ணாத்தூர்

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூர் தொகுதியில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 6 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு துரிஞ்சாபுரம் ஒன்றியம் களஸ்தம்பாடி ஊராட்சியில் தலைவர் கலைஞர் அவர்களின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதில் மாவட்ட கவுன்சிலர் ஆறுமுகம் ,ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன், ஊராட்சி மன்ற தலைவர் ஏழுமலை, ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், ஒன்றிய செயலாள,ர் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

செங்கம்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தொகுதியில் கருணாநிதியின் 6 ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு நகர திமுக சார்பில் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

செங்கம் நகர திமுக அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக சென்று வேலூர் சாலை சந்திப்பில் அலங்கரித்து வைக்கப்பட்ட கருணாநிதிதிரு உருவப்படத்திற்கு மாவட்ட கழக துணை செயலாளரும் செங்கம் சட்டமன்ற உறுப்பினருமான கிரி, அவர்கள் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இதில் நகர செயலாளர் அன்பழகன் ஒன்றிய கழக செயலாளர், மாவட்ட கவுன்சிலர்கள் பேரூராட்சி தலைவர்கள், கட்சி நிர்வாகிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செங்கம் தொகுதியில் உள்ள தண்டராம்பட்டு தானிப்பாடி உள்ளிட்ட இடங்களில் கலைஞர் கருணாநிதியின் ஆறாம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சிகள் நடைபெற்று பொது மக்களுக்கு சிறப்பு அன்னதானங்கள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் ஒன்றிய வட்ட திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் ,பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!