முன்னாள் முதல்வா் கருணாநிதி நூற்றாண்டு விழா சிறப்புக் கருத்தரங்கம்!

முன்னாள் முதல்வா் கருணாநிதி நூற்றாண்டு விழா சிறப்புக் கருத்தரங்கம்!
X

பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கிய சட்டப்பேரவை துணைத் தலைவர் பிச்சாண்டி

ஆரணியில் முன்னாள் முதல்வா் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி, 'சட்டமன்ற நாயகா் கலைஞா்' என்ற தலைப்பில் சிறப்புக் கருத்தரங்கம் நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் முன்னாள் முதல்வா் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி, 'சட்டமன்ற நாயகா் கலைஞா்' என்ற தலைப்பில் சிறப்புக் கருத்தரங்கம் நடைபெற்றது.

தனியாா் பள்ளியில் நடைபெற்ற இந்தக் கருத்தரங்க நிகழ்ச்சிக்கு திமுக வடக்கு மாவட்டச் செயலா் தரணிவேந்தன் தலைமை வகித்தாா்.

மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கணேஷ்மூா்த்தி வரவேற்றாா்.

ஆரணி நகா்மன்றத் தலைவா் மணி, முன்னாள் எம்எல்ஏ சிவானந்தம், திமுக ஒன்றியச் செயலா் அன்பழகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி சிறப்பு அழைப்பாளா்களாக கலந்து கொண்டு, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினாா்.

பின்னா் அவா் பேசுகையில்

ற்ற மாநிலங்களில் பிளஸ் 2 முடித்த 22 சதவீதம் பேர் மட்டுமே உயா்கல்வி பயிலுகின்றனா். தமிழகத்தில் பள்ளிகளை அதிகப்படுத்தியது, அனைத்து கிராமங்களிலும் அப்பகுதியை சேர்ந்த மாணவர்கள் பள்ளி கல்லூரிக்காக தொலைதூரம் சென்று வர கடினமாக இருக்கும் என்ற காரணத்தினால் அவர்கள் இருக்கும் பகுதியிலேயே அதிக அளவில் பள்ளிகள் கல்லூரிகளை அமைத்து 55 சதவீதம் பேர் உயர்கல்வி பயில வழிவகை செய்தவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி தான்

கூட்டுறவு கடைகளில் கிலோ ஒரு ரூபாய்க்கு அரிசி தந்தவா் கருணாநிதி; அதுதான் தற்போது இலவசமாக வழங்கப்படுகிறது. விவசாயத்துக்கு இலவச மின்சாரம் கருணாநிதி வழங்கியதால் நெல் விளைச்சல் அதிகரித்தது என்றாா் .

பின்னர் மாணவ மாணவிகள் முன்னாள் முதல்வர் கலைஞர் கொண்டு வந்த திட்டங்களான சத்துணவில் முட்டை, ஒரு ரூபாய்க்கு அரிசி, பள்ளி மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ், சொத்தில் பெண்களுக்கு சம உரிமை ,விலையில்லா வண்ணத் தொலைக்காட்சி பெட்டி உள்ளிட்ட திட்டங்களை பேச்சுப்போட்டி, கவிதை போட்டி உள்ளிட்ட போட்டிகளில் மூலம் எடுத்துரைத்து பேசி அசத்தினர்.

இதைத்தொடர்ந்து செம்மொழி பாடல் பரதநாட்டியம் மற்றும் வில்லுப்பாட்டு உள்ளிட்ட நிகழ்ச்சி வாயிலாகவும் கலைஞர் கலைத்துறையிலும் மக்கள் தொண்டிலும் ஆற்றிய பணிகளை எடுத்துரைத்தனர்.

நிகழ்ச்சியில் ஆரணி கோட்டாட்சியா் தனலட்சுமி, வந்தவாசி எம்எல்ஏ அம்பேத்குமாா், முன்னாள் எம்எல்ஏக்கள் சிவானந்தம், ஞானசேகரன், மாவட்ட ஊராட்சித் தலைவா் பாா்வதி சீனிவாசன், திமுக மாவட்ட துணைச் செயலா் ஜெயராணி ரவி, மாவட்ட பொருளாளா் தட்சிணாமூா்த்தி, ஒன்றியச் செயலா்கள் காங்கிரஸ் மாவட்டத் தலைவா் பிரசாத் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். பள்ளித் தலைமை ஆசிரியா் மகேஸ்வரி நன்றி கூறினாா்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!