பறக்கும் படை அலுவலர்கள் தீவிர கண்காணிப்பு

பறக்கும் படை அலுவலர்கள் தீவிர கண்காணிப்பு
X

போளூர் வட்ட வழங்கல் அலுவலர் மஞ்சுளா தலைமையிலான பறக்கும் படை குழுவினர் வாகன தணிக்கை மேற்கொண்டனர்

உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் பறக்கும் படை அலுவலர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்

உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பறக்கும் படை அலுவலர்கள் மாவட்டத்தின் எல்லை பகுதியான களம்பூர் எல்லைப் பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுனர்.

இதற்காக 3 பறக்கும் படை வாகனங்கள் நியமனம் செய்யப்பட்டு துணை வட்டாட்சியர் தேவி தலைமையிலான குழு இருபத்தி நான்கு மணி நேரமும் சுழற்சி முறையில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

வாகனத் தணிக்கை செய்து உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லும் பணம் மற்றும் பரிசுப் பொருட்களை பறிமுதல் செய்து தேர்தல் நடத்தும் அலுவலரும், நகராட்சி ஆணையர்கள் இடம் அதனை ஒப்படைக்கப்படும். உரியவர்கள் சரியான ஆவணங்களை காட்டி தேர்தல் முடிந்தவுடன் பணம், பொருட்களையும் பெற்றுக்கொள்ளலாம் .

மேலும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பை ஒட்டி கண்ணமங்கலம் பேரூராட்சி எல்லையில் போளூர் வட்ட வழங்கல் அலுவலர் மஞ்சுளா தலைமையிலான பறக்கும் படை குழுவினர் வாகன தணிக்கை மேற்கொண்டனர்

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்