குறை தீர்வு கூட்டத்திற்கு அதிகாரிகள் வராததால் விவசாயிகள் வெளிநடப்பு
வெளிநடப்பு செய்த விவசாயிகள்
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் கோட்டை வீதியில் உள்ள மேற்கு ஆரணி வேளாண்மை துறை அலுவலக கூட்ட அரங்கில் விவசாய குறைதீர்வு கூட்டம் கோட்டாச்சியர் பாலசுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது.
மேலும் இதில் ஆரணி சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து விவசாயிகள் பங்கேற்க கூட்டத்திற்கு வருகை புரிந்தனர். ஆனால் கூட்டத்தில் வருவாய் துறை, மின்சார துறை உள்ளிட்ட பல்வேறு துறையை சேர்ந்த அதிகாரிகள் யாரும் பங்கேற்கவில்லை என்பதால் விவசாயிகளின் குறைகளை தெரிவிக்க விவசாய குறைதீர்வு கூட்டத்திற்கு அதிகாரிகள் தொடர்ந்து புறக்கணிப்பதை கண்டித்தும் துறை சார்ந்த அதிகாரிகளையும் கண்டித்தும் விவசாயிகள் கூட்டத்தை புறக்கணித்து விட்டு வேளாண்மை துறை அலுவலக வளாகத்தில் விவசாய சங்கத் தலைவர்கள் மூர்த்தி மற்றும் ஜெயபாலன் தலைமையில் விவசாயிகள் அதிகாரிகளை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பினார்கள்.
பின்னர் மக்களுடன் முதல்வர் முகாமிற்கு அனைத்து அதிகாரிகளும் சென்று விட்டதால் அதிகாரிகள் யாரும் வரவில்லை என்று கூறுகின்றனர். இதனால் விவசாய குறைதீர்வு கூட்டத்தை மாற்று தேதி அறிவிக்குமாறு விவசாயிகள் சார்பில் கேட்டதற்கு அதிகாரிகள் செவிசாய்க்கவில்லை. வந்துள்ள துறை சார்ந்த அதிகாரியும் செல்போனில் பேசியபடி உள்ளதால் விவசாயிகளின் குறைகளை எப்படி போக்க முடியும் என்று விவசாயிகள் வேதனையுடன் கூறி கலைந்து சென்றனர். இதில் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.
கலசப்பாக்கம்
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கத்தில் ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்கம் மையத்தில் விவசாயிகள் குறை தீர்வு நாள் கூட்டம் மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலர் சாந்தி தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் விவசாயிகள் பேசும் பொழுது விவசாயிகளுக்கு கூட்டம் ஏற்பாடுகள் குறித்து சரியான தகவல்கள் தெரிவிப்பதில்லை மாதந்தோறும் நடைபெறும் கூட்டத்திற்கு மாதம் ஒரு அதிகாரிகள் கலந்து கொள்வதால் விவசாயிகள் கொடுக்கும் கோரிக்கைகள் நிறைவேற்றுவதில் சுனக்கம் ஏற்படுகிறது. ஆகவே குறைந்து ஆறு மாதங்களுக்காவது ஒரு அதிகாரியை விவசாய குறை தீர்வு நாள் கூட்டத்திற்கு தலைமை ஏற்று நடத்த வேண்டும்.
மற்றும் வார சந்தைகள் நடைபெறுகின்ற சந்தைகளில் விவசாய பொருட்களுக்கு சுங்க வசூல் செய்யக்கூடாது. கிராமத்தில் இடத்தின் மதிப்பு குறித்து வழிகாட்டும் நெறிமுறைகள் கடைபிடிக்க வேண்டும். கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தில் சரியான பயனாளிகளை தேர்வு செய்து வீடு வழங்க வேண்டும். 100 நாள் வேலை திட்டத்தில் சரியான கூலிகளை வழங்க வேண்டும்.
விவசாயத்திற்கு தேவையான நெல் விதைகளை சரியான பருவ காலத்தில் வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் பேசினர்.
நிகழ்ச்சியில் வேளாண்மை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu