ஆரணியில் விவசாய சங்கத்தினர் முகமூடி அணிந்து நூதன ஆர்ப்பாட்டம்

முகமூடி அணிந்து நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தின் முன்பு மக்கள் வழிகாட்டி இயக்கம் மற்றும் விவசாய சங்கம் உள்ளிட்டவற்றின் சார்பாக முகமூடி அணிந்து நூதன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆரணி கோட்டை மைதானம் அருகே உள்ள வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன் மக்கள் வழிகாட்டி இயக்கம் மற்றும் விவசாய சங்கங்களை சேர்ந்த விவசாயிகள் இதில் பங்கேற்றனர்.
மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காத வருவாய்த்துறை அதிகாரிகளை கண்டித்து அப்போது கோஷங்கள் எழுப்பினர்.
இதில் கலந்து கொண்டவர்கள் மக்கள் வழிகாட்டி இயக்கத்தினர் மாநில தலைவர் ராஜேஷ் தலைமையில் முகத்தில் முகமூடி அணிந்து வருவாய்த்துறை அதிகாரிகளை கண்டித்து கோஷமிட்டனர். இதில் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.
மதுக் கடை திறக்கக் கோரி மனு
ஆரணியை அடுத்த நடுக்குப்பம் மதுரா விநாயகபுரம் மயானப் பகுதியில் மதுக் கடை திறக்கக் கோரி, வட்டாட்சியரிடம் மதுப் பிரியா்கள் மனு கொடுத்தனா்.
ஆரணி அடுத்த நடுக்குப்பம் ஊராட்சியில் ஆரணி - சந்தவாசல் நெடுஞ்சாலையில் பள்ளி பகுதி அருகாமையில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வந்தது. இந்த கடையை அகற்ற வலியுறுத்தி கிராம மக்கள் கிராம சபை கூட்டத்தின் மூலம் பொதுமக்கள் பலமுறை வலியுறுத்தினர். ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருந்தது. இதை தொடர்ந்து கடந்த ஜனவரி 26-ந் தேதி நடந்த கிராமசபை கூட்டத்தில் வார்டு உறுப்பினர்கள் 5 பேர் ராஜினாமா கடிதம் கொடுத்ததின் பேரில் உடனடியாக டாஸ்மாக் கடையை மூட நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் முருகேஷ் உறுதியளித்தார். அதனைத் தொடர்ந்து கடை திறக்கப்படவில்லை
இதனிடையே நேற்று நடுக்குப்பம் ஊராட்சிக்கு உட்பட்ட விநாயகபுரம் மயான பகுதி அருகாமையில் டாஸ்மாக் கடை அமைக்க டாஸ்மார்க் மேலாளர் மற்றும் அலுவலர்கள், வருவாய்த்துறையினர் ஆய்வு மேற்கொண்டிருந்தனர்.
தகவல் அறிந்த சுற்றுவட்டார பகுதியில் உள்ள மதுபான பிரியர்கள் ஆரணி தாசில்தார் ஜெகதீசிடம் கோரிக்கை மனு வழங்கினார். அந்த மனுவில், நாங்கள் 6 கி.மீ. தொலைவில் உள்ள சந்தவாசல், 4 கி.மீ. தொலைவில் உள்ள காமக்கூா் ஆகிய பகுதிகளுக்குச் சென்று மதுபானம் வாங்கி வரவேண்டிய நிலை உள்ளது. இதனால், வரும் வழியில் விபத்து ஏற்படுகிறது.
காவல்துறை வாகனச் சோதனையால் மன உளைச்சல் ஏற்படுகிறது. அதனால், பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத வகையில், தற்போது அரசு தோவு செய்துள்ள நடுக்குப்பம் மதுரா விநாயகபுரம் மயானப் பகுதியில் மதுக் கடை அமைக்க வேண்டும் என வலியுறுத்தி, ஆரணி வட்டாட்சியா் ஜெகதீசனிடம் மனு கொடுத்தனா்.
மனுவை பெற்றுக்கொண்ட தாசில்தார் ஜெகதீசன், இந்த மதுபான கடை இங்கு இருப்பதினால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள், பள்ளி மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாக கூறினார். எனவே மாவட்ட நிா்வாகத்துக்கு அனுப்பி பரிசீலனை செய்து நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தாா்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu