குடும்பத் தகராறு: நெசவு தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

குடும்பத் தகராறு: நெசவு தொழிலாளி   தூக்கிட்டு தற்கொலை
X
Family dispute: Weaver commits suicide by hanging

ஆரணி ஆரணிப்பாளையம் ராஜாஜி தெருவைச் சேர்ந்தவர் சண்முகம் ( 52), நெசவு தொழிலாளி. இவருக்கு அஞ்சலா என்ற மனைவியும் மணிகண்டன், கார்த்திகேயன், பிரவீன்குமார் ஆகிய 3 மகன்களும் உள்ளனர். சண்முகத்துக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளது. இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கம்.

இந்த நிலையில் இன்று மீண்டும் கணவன்- மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த சண்முகம் வீட்டில் உள்ள அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். மாலையில் அஞ்சலா வந்து பார்க்கும்போது தூக்கு போட்டு கணவன் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.இதுகுறித்த புகாரின் பேரில் ஆரணி டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சண்முகத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
நீதிமன்றம் உத்தரவிட்டது பாதிக்கப்பட்டவருக்கு அதிகபட்ச இழப்பீடு வழங்க உத்தரவு..!