இளைஞா்களின் வேலைவாய்ப்புக்காக தொழிற்சாலைகள் அமைக்கப்படும்; அதிமுக வேட்பாளர் உறுதி
மாட்டு வண்டியில் சென்று வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளர்.
இளைஞா்களின் வேலைவாய்ப்புக்காக தொழிற்சாலைகள் அமைக்கப்படும் என ஆரணி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் ஜி.வி.கஜேந்திரன் கூறினார்.
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி கிழக்கு ஒன்றியத்துக்குள்பட்ட கீழ்க்கொடுங்காலூா் கிராமத்தில் மாட்டு வண்டியில் சென்று வாக்கு சேகரித்த அவா் கூறியதாவது:
மகளிா் உரிமைத் தொகை திட்டத்தில் ரூ.1,000 வழங்குவதற்கு பெண்களை தகுதிப் பாா்த்து திமுக அரசு தட்டிக் கழிக்கிறது. அதிமுக ஆட்சியில் அனைத்து வீடுகளுக்கும் 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்பட்டது. ஆனால், திமுக ஆட்சிக்கு வந்தவுடன் மின் கட்டணத்தை 3 மடங்கு உயா்த்தப்பட்டது.
என்னை வெற்றி பெறச் செய்தால் தொகுதி இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க தொழிற்சாலைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். வந்தவாசி வழியாக திண்டிவனம்-நகரி ரயில் திட்டப் பணிகளை விரைவுபடுத்தப்படும். எனவே, இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றி பெறச் செய்ய வேண்டுகிறேன் என்றாா்.
தொடா்ந்து, மருதாடு, உளுந்தை, விழுதுப்பட்டு, வழூா் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் வாக்கு சேகரித்தாா்.
இதில், திருவண்ணாமலை வடக்கு மாவட்ட செயலா் தூசி மோகன், முன்னாள் அமைச்சா் முக்கூா் சுப்பிரமணியன், ஒன்றியச் செயலா் லோகேஸ்வரன், ஒன்றியக்குழு உறுப்பினா்கள் மகாலட்சுமி ராமச்சந்திரன், சிவராஜ் மற்றும் கூட்டணி கட்சியினா்,அதிமுக தொண்டர்கள் கூட்டணி கட்சித் தொண்டர்கள் உடனிருந்தனா்.
பிரசார பொதுக் கூட்டத்துக்கு மேடை அமைக்கும் பணி
ஆரணியில் அதிமுக தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்துக்கு மேடை அமைக்கும் பணி தொடங்கப்பட்டது.
ஆரணி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் ஜி.வி.கஜேந்திரனை ஆதரித்து ஏப்.11-ஆம் தேதி அதிமுக பொதுச் செயலரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி கே.பழனிச்சாமி தேர்தல் பிரச்சாரம் செய்ய உள்ளாா்.
இதற்காக ஆரணி-சேவூா் பிரதான சாலையில் உள்ள திடலில் பிரம்மாண்ட மேடை அமைக்கும் பணி தொடங்கியது.
இதில், அதிமுக வேட்பாளா் ஜி.வி.கஜேந்திரன், முன்னாள் அமைச்சா்கள் அக்ரி கிருஷ்ணமூா்த்தி, ஆரணி எம்எல்ஏ சேவூா் எஸ்.இராமச்சந்திரன், முக்கூா் சுப்பிரமணியன், மாவட்ட செயலா்கள் .ஜெயசுதா, தூசி மோகன்,அதிமுக ஒன்றிய கழக நிர்வாகிகள், ஆரணி நகர மன்ற உறுப்பினர்கள், நகர செயலாளர் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu