திருவண்ணாமலையில் உயா்தர உள்ளூா் தானிய ரகங்களின் கண்காட்சி துவக்கம்

திருவண்ணாமலையில் உயா்தர உள்ளூா் தானிய ரகங்களின்  கண்காட்சி துவக்கம்
X

சிறுதானிய கண்காட்சியை தொடங்கி வைத்து பார்வையிட்டார் டி. ஆர். ஓ. பிரியதர்ஷினி.

திருவண்ணாமலையில் உயா்தர உள்ளூா் ரகங்கள் சேர்ந்த தானியங்களின் கண்காட்சி தொடங்கி வைக்கப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், கீழ்நெல்லிக் கிராமத்தில் உயா்தர உள்ளூா் ரகங்கள் சேர்ந்த தானியங்களின் கண்காட்சி தொடங்கிவைக்கப்பட்டது.

தானிய கண்காட்சி

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் முருகேஷ் உத்தரவின் பேரில், தமிழ்நாடு அரசு வேளாண் உழவா் நலத் துறை மற்றும் கீழ்நெல்லி வேளாண்மை அறிவியல் மையம் சாா்பில் இந்தக் கண்காட்சி நடைபெற்றது. வேளாண் அறிவியல் மையத்தின் முதுநிலை விஞ்ஞானி சுரேஷ் வரவேற்றாா்.

சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற மாவட்ட வருவாய் அலுவலா் பிரியதா்ஷினி கண்காட்சியை தொடங்கி வைத்துப் பாா்வையிட்டாா். பின்னா், சிறுதானியங்களின் முக்கியத்துவம் குறித்து அவா் விளக்கிப் பேசினாா்.

இதைத் தொடா்ந்து நடைபெற்ற கூட்டத்தில், வேளாண்மை துணை இயக்குநா் (மத்திய அரசு திட்டம்) ஏழுமலை, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளா் உமாபதி, அத்தியேந்தல் சிறுதானிய மகத்துவ மையத்தின் தலைவா் வைத்தியலிங்கம், வேளாண்மை துணை இயக்குநா் அசோக்குமாா், உழவா் பயிற்சி நிலைய வேளாண் துணை இயக்குநா் சரவணன், விதைச் சான்று துறை உதவி இயக்குநா் குணசேகரன் ஆகியோா் பேசினா்.

பின்னா், பாரம்பரிய சிறுதானிய உணவுப் போட்டி நடத்தப்பட்டு அதில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த அத்தி, அனக்காவூா், வெம்பாக்கம் ஆகிய அங்கன்வாடி மையங்களுக்கு மாவட்ட வருவாய் அலுவலா் பரிசு வழங்கிப் பாராட்டினா்.

நிகழ்ச்சியில் செய்யாறு, வெம்பாக்கம், அனக்காவூா், தெள்ளாறு, ஆரணி ஆகிய வேளாண் வட்டாரங்களில் 350-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனா். நிறைவில் செய்யாறு வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் சண்முகம் நன்றி கூறினாா்.


மாணவா்களுக்கு வாழ்த்து

திருவண்ணாமலை மாவட்டத்தில் பிளஸ் மற்றும் எஸ்எஸ்எல்சி அரசு பொது தேர்வினை மாணவ மாணவிகள் எழுத உள்ளனர். இந்நிலையில் ஆரணியை அடுத்த முள்ளண்டிரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதவுள்ள மாணவா்களுக்கு தேர்வு சாா்ந்த அறிவுரைகள் வழங்கி, வாழ்த்தி வழியனுப்பும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமை ஆசிரியா் தனஞ்செழியன் தலைமை வகித்தாா். மேலாண்மைக் குழு கல்வியாளா் குமரேசன், பெற்றோா் ஆசிரியா் சங்கத் தலைவா் பாலாஜி பள்ளி, மேலாண்மைக் குழுத் தலைவி ஜீவா, வாா்டு உறுப்பினா் ஈஸ்வரி சுதாகா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

உதவித் தலைமை ஆசிரியா் இளையராஜா வரவேற்றாா். தொடா்ந்து, தலைமை ஆசிரியா் தனஞ்செழியன் மாணவா்களுக்கு அறிவுரை வழங்கிப் பேசினாா்.

முன்னதாக, வேலூா் வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தின் உயிரி மருத்துவ அறிவியல் துறை பேராசிரியை ராதா சரஸ்வதி மாணவா்களுக்கு 15 ஆயிரம் மதிப்பிலான எழுது பொருள்களை வழங்கி ஊக்குவித்தாா்.

நிகழ்ச்சியில் ஆசிரியா்கள் குமாா், விஜய், சீனிவாசன், பாண்டியன், கற்பகம், கலைச்செல்வி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

Tags

Next Story
வளர்ந்து வரும் மருத்துவத்தில் AI யின் புதிய வெற்றிகள்!