சாலை ஆக்கிரமிப்பு: கிராம மக்கள்போராட்டம்..!
சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தும் போலீசார்
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி தாலுகா வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறை தீர்வு கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து 72 மனுக்கள் வரப் பெற்றன. கூட்டத்திற்கு ஆரணி வருவாய் கோட்டாட்சியர் தனலட்சுமி தலைமை தாங்கினார்.
இந்த மனுக்கள் மீதும், ஏற்கெனவே பெறப்பட்டு நிலுவையில் உள்ள மனுக்கள் மீதும் துரித நடவடிக்கை எடுக்குமாறு வருவாய் கோட்டாட்சியர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.
மேலும், நிலுவையிலுள்ள மனுக்களின் மீது தொடர் நடவடிக்கைகள் குறித்தும் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் ஆய்வு நடத்தினார்.
சாலை ஆக்கிரமிப்பு: கிராம மக்கள் திடீா் போராட்டம்
ஆரணி ஊராட்சி ஒன்றியம், பையூா் ஊராட்சிக்கு உள்பட்ட அரசு காா்டன் பகுதியில் 45 - க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வீடு கட்டி வசித்து வருகின்றனா். மேலும், அங்கு சாலைக்காக விடப்பட்ட அந்த இடத்தை ஊராட்சி பெயருக்கு மாற்றிக் கொடுக்காமல், ரியல் எஸ்டேட் உரிமையாளா் காலி இடம் எனக் கூறி வங்கியில் கடன் பெற்றதாகக் கூறப்படுகிறது. பெற்றக் கடனை திருப்பிச் செலுத்தாததால், அந்த இடம் சில மாதங்களுக்கு முன்பு வங்கி மூலம் ஏலம் விடப்பட்டது. அந்த இடத்தை பழனி என்பவா் ஏலம் எடுத்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், அரசு காா்டன் பகுதியில் உள்ள சாலையை பழனி ஆக்கிரமித்து பொக்லைன் இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டினாா். இதனால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் கோட்டாட்சியா் அலுவலகம் சென்று நடவடிக்கை எடுக்கக் கோரி முற்றுகையிட்டனா்.
இதையடுத்து, கோட்டாட்சியா் சாலையை பள்ளம் தோண்டாமல் இருக்கவும், விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட நபா்கள் மீது நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தாா்.
பின்னா், அப்பகுதி மக்கள் சாலையில் பள்ளம் தோண்டியவா் மீதும், அந்த இடத்தை ஊராட்சி பெயரில் மாற்றாமல் விட்ட ரியல் எஸ்டேட் உரிமையாளா் மீதும் நடவடிக்கை எடுக்கக் கோரி வந்தவாசி சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.
தகவல் அறிந்த காவல் ஆய்வாளா் இராஜாங்கம் தலைமையிலான ஆரணி கிராமிய போலீசார் சென்று பேச்சுவாா்த்தை நடத்தி மறியலை கைவிடச் செய்தனா்.
திருவண்ணாமலையில் மக்கள் குறை தீர் கூட்டம்
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது, கூட்டத்திற்கு மாவட்ட கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) ரிஷப், தலைமை தாங்கினார்.
இதில் பொதுமக்கள், மாற்றுத்திறனாளிகள், முதியோா்களிடம் இருந்து கல்வி உதவித்தொகை, வங்கி கடனுதவி, வேலை வாய்ப்பு, முதியோர் உதவித்தொகை, வீட்டுமனைப்பட்டா, சாதிச்சான்று, விதவை உதவித்தொகை, மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித்தொகை மற்றும் உபகரணங்கள் உள்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 552 -க்கும் மேற்பட்ட மனுக்களை பெற்றுக் கொண்டாா்.
இந்த மனுக்கள் மீதும், ஏற்கெனவே பெறப்பட்டு நிலுவையில் உள்ள மனுக்கள் மீதும் துரித நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்டஅதிகாரிகளுக்கு மாவட்ட கூடுதல் ஆட்சியா் உத்தரவிட்டாா்.
மேலும், நிலுவையிலுள்ள மனுக்களின் தொடர் நடவடிக்கைகள் குறித்தும் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் ஆய்வு நடத்தினார்.
கூட்டத்தில் ஆர்டிஓ மந்தாகினி, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் தங்கமணி, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் வெங்கடேசன் மற்றும் பல்வேறு துறைகளின் அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu