ஆரணி நகராட்சி அலுவலகத்தில் ஊதியம் வழங்கக்கோரி பணியாளர்கள் போராட்டம்
ஆரணி நகராட்சி அலுவலகத்தில் ஊதியம் வழங்கக்கோரி பணியாளர்கள் போராட்டம்
ஆரணி நகராட்சி நிர்வாகம் உடனடியாக எங்களுக்கு சம்பளத்தை வழங்க வேண்டும் எனக் கூறி, இன்று காலை ஆரணி நகராட்சி அலுவலகத்தில் பணியாளர்கள் நகராட்சி அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். இவர்களுடன் இணைந்த பொறியியல் அலுவலக ஊழியர்கள், தங்களுடைய சம்பள பாக்கிகளையும் தருமாறு கேட்டனர்.
போராட்டத்தின் போது நகராட்சி ஆணையாளர் ராஜ விஜய காமராஜை, பணியாளர்கள் அனைவரும் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட பணியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதிகாரிகள் தரப்பில், 'கொரோனா காலம் என்பதால், ஆரணி நகராட்சி பகுதியில் சரியாக வரி வசூல் ஆகவில்லை. ஆகவே உங்களுக்கு வழங்க வேண்டிய சம்பள பாக்கியை வழங்க அரசு சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விரைவில் சம்பளம் கிடைக்க வழிவகை செய்யப்படும்' எனக்கூறப்பட்டது.
அதிகாரிகளின் அந்த உத்தரவாதத்தின் அடிப்படையில் தங்களுக்கு விரைவில் சம்பளம் கிடைக்கப்பெறும் என்ற எதிர்ப்பார்ப்போடு, நம்பிக்கையுடன் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். வேதனையுடன் புறப்பட்டு சென்ற ஊழியர்களுக்கு அவர்களின் ஊதியம் கிடைக்கப்பெறுமா என பொறுத்திருந்து பார்க்கலாம்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu