திருவண்ணாமலை மாவட்டத்தில் மின்வாரிய ஊழியர்கள் விழிப்புணர்வு பிரச்சாரம்
துண்டு பிரசுரங்கள் வழங்கி பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திய மின்வாரிய ஊழியர்கள்.
திருவண்ணாமலை மாவட்டம் தேவிகாபுரத்தில் மின்வாரிய ஊழியர்கள் மழைக்காலத்தை முன்னிட்டு, பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்கள் வழங்கி, விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
தேவிகாபுரம் மின்வாரிய ஊழியர்கள் மற்றும் பொறியாளர்கள், செயற்பொறியாளர் ரவிச்சந்திர பாபு வழிகாட்டுதலின்படி, உதவி செயற்பொறியாளர் எழிலரசி, உதவி பொறியாளர்கள் கருணாகரன், ராஜேந்திரன், தனலட்சுமி மற்றும் மின்வாரிய ஊழியர்கள் தேவிகாபுரம் மற்றும் பக்கத்தில் உள்ள கிராமங்களுக்கு சென்று மழைக்காலத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு பாதுகாப்பு தொடர்பான அறிவுறுத்தல்களை வழங்கினர்.
மின்சார வயர்கள் சாலையில் அறுந்து விழுந்து கிடந்தால் அதனை தொடவோ, மிதிக்கவோ வேண்டாம்.
வீடுகளில் பயன்படுத்தப்படும் மின்சாதனப் பொருட்களைப் பாதுகாப்பாக பயன்படுத்தவும்.
சாலையில் உள்ள மின் கம்பங்களிலும் பாதுகாப்பு கம்பிகளிலும் ஆடு-மாடுகளை கட்ட வேண்டாம்.
மின் துண்டிப்பு ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவியுங்கள்.
தாங்களாகவே சென்று மின்மாற்றியை இயக்க வேண்டாம்.
உங்கள் உடமைகளுக்கும் உயிருக்கும் பாதுகாப்பாக செயல்படுங்கள் என துண்டு பிரசுரங்களை வழங்கி, பொதுமக்கள் கூடும் இடங்களான பஜார் வீதி, பஸ் நிலையம்,தேவிகாபுரம், தச்சம்பாடி, ஊத்தூர், ஆத்துரை, மலையான்புரடை, தும்பூர், ஓதலவாடி, பத்யாவரம் போன்ற பகுதிகளில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
பசு மாடு உயிரிழப்பு
சேத்துப்பட்டு பகுதியில் மின்சார வயர் அறுந்து விழுந்ததால், பசுமாடு ஒன்று சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது..
சேத்துப்பட்டு அருந்ததி பாளையத்தில், கூலித் தொழிலாளி வேலு என்பவருக்கு சொந்தமான பசு மாட்டின் மீது மின் வயர் அறுந்து விழுந்ததில், பசுமாடு துடிதுடித்து சம்பவ இடத்திலேயே இறந்தது.
அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள், அருகே இருந்த ட்ரான்ஸ்ஃபார்மரை செயலிழக்க செய்தனர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu