அடுத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தான், த.மா.க தலைவர் வாசன் உறுதி

அடுத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தான், என்று த.மா.க தலைவர் ஜிகே வாசன் கூறினார்.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
அடுத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தான், த.மா.க தலைவர் வாசன் உறுதி
X

செய்தியாளர்களை சந்தித்த தமாகா தலைவர் ஜி கே வாசன்

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை வரவேற்கிறேன், அடுத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தான், என்று த.மா.க தலைவர் ஜிகே வாசன் கூறினார்.

பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக திருவண்ணாமலை மாவட்டம் ஆரணிக்கு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி. கே. வாசன், எம்பி வருகை தந்தார்.

அப்பொழுது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

வருகிற நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் மோடி தான் பிரதமர் ஆவார். இதில் எந்த மாற்று கருத்தும் இல்லை, தமிழகத்திற்கு அடுத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தான். இதற்காக மக்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். எப்பொழுது தேர்தல் வந்தாலும் அ.தி.மு.க. கூட்டணிக்கு தான் மக்கள் வாக்களிப்பார்கள். திமுக இரண்டு ஆண்டு கால ஆட்சியில் அனைத்து துறைகளிலும் குறைகள் உள்ளது. கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. இதனை மக்கள் கூர்ந்து கவனித்து வருகின்றனர். இதற்கு வாக்கு சீட்டின் மூலம் மக்கள் பதில் கூற தயாராகி விட்டார்கள்.

அதிமுகவை பொருத்தவரை பாஜக தலைமையிலான மத்திய அரசுக்கு தான் ஆதரவு. அதிமுக, தமாக உள்ளிட்ட ஒத்த கருத்துக்கள் உள்ள கட்சிகள் கூட்டணியில் பாஜக அமோக வெற்றி பெறும்.. பா.ஜ.க.வை பொறுத்தவரை யாரை சந்திக்க வேண்டுமோ அவர்களை நட்டா சந்தித்து விட்டார். என்ன பேச வேண்டுமோ அதை பேசிவிட்டார். என்ன பேசினார்கள் என்று யாருக்கும் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

எங்களை பொறுத்தவரை அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும். வளமான தமிழகம், வலிமையான பாரதம் அமைய இது வழிவகுக்கும். எந்த மாநில தலைவர்களாக இருந்தாலும் சரி பொதுவாக இறந்தவர்கள் குறித்து விமர்சனங்கள் செய்வது சரியானது அல்ல.

ஒரே நாடு, ஒரே தேர்தல் முறையை வரவேற்கிறேன், அதற்கான குழுவை முன்னாள் ஜனாதிபதி தலைமையில் அமைத்து ஆய்வு நடந்து வருகிறது. இதனால் செலவுகள் பெரும்பான்மையாக குறையும். அதற்கான தாக்கம் விரைவில் மக்களுக்கு புரியும்., நாட்டின் வளர்ச்சி தேவை. அதற்கு பொருளாதாரம் தேவை. இதனால் அடிக்கடி தேர்தல் தேவையில்லாதது.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆரணி எம்எல்ஏ சேவூா் எஸ்.ராமச்சந்திரன், திருமலை ஜெயின மடத்தின் மடாதிபதி தவளகீா்த்தி சுவாமிகள், தமாகா மாவட்டத் தலைவா் தாமோதரன், நகரத் தலைவா் தினேஷ் மற்றும் நிா்வாகிகள் ராயா் கிருஷ்ணமூா்த்தி, புருஷோத்தமன், எஸ்.வி.நகரம் பாலுமுதலியாா், , ஊராட்சித் தலைவா் ராஜேஷ்வரி முரளி, ஒன்றியக் குழு உறுப்பினா் கவிதா பாபு உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

Updated On: 25 Sep 2023 1:26 AM GMT

Related News