சாலை வசதி இல்லாததால் இறந்தவரின் உடலை டோலி கட்டி தூக்கி சென்ற கிராம மக்கள்
இறந்தவரின் உடலை டோலி கட்டி தூக்கிச் சென்ற உறவினர்கள்
ஆரணி அடுத்த கண்ணமங்கலம் அருகே உள்ள கானமலை பகுதியில் போக்குவரத்து வசதி இல்லாததால் சடலத்தை டோலியில் கட்டி தூக்கிச்செல்லும் அவல நிலை உள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலை கண்ணமங்கலம் அருகே உள்ள கானமலை ஆகிய பகுதிகளில் சரியான முறையில் போக்குவரத்து வசதி இல்லாததால் அப்பகுதி மக்கள் இன்றும் டோலி முறையை பயன்படுத்தி வருகின்றனர்..
மேலும் அப்பகுதி பழங்குடியினா் சாலை வசதி கேட்டு கோரிக்கை விடுத்துள்ளனா்.
ஆரணி அடுத்த கண்ணமங்கலம் பகுதியைச் சேர்ந்த படவேடு அருகே கானமலை ஊராட்சியில் 32 மலை கிராமங்கள் உள்ளது. இதில் கானமடை, எலந்தம்பட்டு, நீா்தும்பை, முருகமந்தை, மல்லிமடு உள்ளிட்ட 32 மலை கிராமங்கள் உள்ளது. இக்கிராமங்களில் மொத்தம் சுமாா் 10,000 மேற்பட்ட பழங்குடியினா் வசித்து வருகின்றனா்.
இம்மலை கிராமங்களிலிருந்து மருத்துவ சிகிச்சை, கல்வி பயில , பிரசவ வலி, விஷப்பாம்பு கடி, பூச்சி கடி என எந்த சம்பவம் நடந்தாலும் 7 கிலோமீட்டா் தூரம் கரடு முரடான மண் பாதையில்தான் தான் மருத்துவமனைக்கும், பள்ளிக்கூடத்திற்கும் நடந்து செல்ல வேண்டும். வாகனம் செல்ல முடியாதவாறு பாதை இருப்பதால் அனைவரும் கீழே உள்ள புதூா் வரை நடந்தே செல்ல வேண்டிய நிலை உள்ளது. பின்னா் புதூா் கிராமத்தில் இருந்து வாகனத்தில் பயணம் செல்வாா்கள். இதன் காரணமாக அதிக உயிா் இழப்புகளும், பெரும் பாதிப்புகளும் அப்பகுதி மக்களுக்கு ஏற்படுகிறது.
இதன் காரணமாக மலை பாதைக்கு சாலை அமைத்து போக்குவரத்து வசதி ஏற்படுத்தி தருமாறு பல ஆண்டு காலமாக அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனா். இந்நிலையில் கானமலை பகுதியைச் சேர்ந்த பாப்பான் மகன் ராமசாமி என்பவா் கேரளாவில் உள்ள காப்பி தோட்டத்தில் பணிபுரிந்துகொண்டிருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டு இறந்தாா்.
இதன் காரணமாக சொந்த ஊரான கானமலைக்கு உடலை கொண்டு சென்று அங்கு சடங்குகளை முடித்து சடலம் எடுத்துச் செல்ல சாலை வசதி இல்லாததால் டோலி கட்டி உறவினா்கள் நடந்தே தூக்கிச் சென்றனா். நடந்து சென்று அதன் பிறகு இடுகாட்டில் உடலை அடக்கம் செய்யும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் எங்கள் பகுதிக்கு உடனடியாக சாலை வசதி வேண்டும் என்றும் நடவடிக்கை எடுக்கா விட்டால் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்க போவதாக தெரிவித்தனா்.
எனவே இதுகுறித்து கலெக்டர் நேரில் சென்று பார்வையிட்டு கிராமத்திற்கு மட்டுமின்றி சாலை வசதியில்லாத மலை கிராமங்களுக்கு சாலை அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மலை கிராம மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu