ஆரணி அருகே மளிகை கடையில் போதைப் பொருட்கள் விற்றவர் கைது
போலீசார் கைது செய்த மளிகை வியாபாரி ஜெகநாதன்.
Crime News in Tamil -தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா போன்ற பொருட்களின் விற்பனைக்கு எதிராக தீவிர நடவடிக்கைகள்எடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் உத்தரவின் பேரில் ஆரணி டி.எஸ்.பி. ரவிச்சந்திரன் தலைமையில் கண்ணமங்கலம் இன்ஸ்பெக்டர் சாலமன் ராஜா, சப் இன்ஸ்பெக்டர்கள் விஜயகுமார், தரணி, ஏழுமலை தனி பிரிவு போலீசார் ஏகாம்பரம் மற்றும் பிரபாகரன் உள்பட பலர் குப்பம் கிராமத்தில் போதை பொருள் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு அங்குள்ள கடைகளில் சோதனை மேற்கொண்டனர்.
இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த குப்பம் கிராமத்தில் ஜெகநாதன் என்பவரின் மளிகை கடையில் ரூ. 50 ஆயிரம் மதிப்புள்ள போதை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து அந்த கடைக்கு சீல் வைத்தனர்.
மேலும் கடையில் போதை பொருட்களை விற்பனை செய்த ஜெகநாதனை போலீசார் கைது செய்தனர். அதேபோல் திருவண்ணாமலை டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியம் மற்றும் போலீசார் இரவு சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்
அப்போது அங்கு ஒரு வாலிபர் சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்தார். அவரை போலீசார் சோதனை செய்த போது அவரிடம் இருந்து 10 கிராம் கஞ்சா மற்றும் 10 லிட்டர் சாராயம் இருப்பது தெரியவந்தது.
விசாரணையில் அவர் திருவண்ணாமலை மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்த பாலச்சந்தர் என்கின்ற விமல் என்பதும் தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர் மேலும் அவரிடம் இருந்து கஞ்சா சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.
அதேபோல் ஆரணி அடுத்த பூச்சி மலை குப்பம் மலை மீது வினோதமான முறையில் கயிறு கட்டி சாராயம் விற்பதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இந்த ரகசிய தகவலின் அடிப்படையில் ஆரணி டி.எஸ்.பி. ரவிச்சந்திரன் , தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் புகழ் , சப்-இன்ஸ்பெக்டர் ஷாபுதீன், பயிற்சி சப் இன்ஸ்பெக்டர் சந்தோஷ் குமார் , ஆயுதப்படை போலீசார் தனிப்படை போலீசார் மற்றும் போலீசார் ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் பூச்சி மலை குப்பம் கிராம மலைப்பகுதியில் சாராய சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது போலீசாரை பார்த்தவுடன் சாராய வியாபாரிகள் அங்கிருந்து தப்பி ஓடினார்கள். பின்னர் போலீசார் அங்கு இருந்த சுமார் 300 சாராய பாக்கெட் 250 லிட்டர் சாராயம் 5 லாரி ட்யூபுகள் மற்றும் சாராய பாக்கெட் திறக்கப்பட்ட இரும்பு கம்பிகள் கயிறுகள் உள்ளிட்டவைகளை சம்பவ இடத்திலேயே போலீசார் அழித்தனர். மேலும் அப்பகுதி சுற்றியில் உள்ள மலைப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் போதை பொருட்களுக்கு எதிரான வேட்டையில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu