போதைப்பொருள் விழிப்புணர்வு பேரணி: 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு

போதைப்பொருள் விழிப்புணர்வு பேரணி: 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு
X

ஆரணி ஆர்டிஓ தனலட்சுமி போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

ஆரணியில் நடைபெற்ற போதைப்பொருள் விழிப்புணர்வு பேரணியில் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

ஆரணி டவுன் கோட்டை வீதியில் உள்ள தாசில்தார் அலுவலகம் எதிரில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி நகராட்சி ஆணையர் தமிழ்ச்செல்வி தலைமையில் நடைபெற்றது.

இதில் பங்கேற்ற ஆரணி ஆர்டிஓ தனலட்சுமி போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

பேரணி பழைய பஸ் நிலையம் காந்தி ரோடு மார்க்கெட் வீதி புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட முக்கிய வீதிகள் பேரணி சென்றடைந்தன.

போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணியில் சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் போதைப்பொருளை ஒழிக்க வேண்டும் என்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பதாகைகளை ஏந்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இந்நிகழ்ச்சியில் தாசில்தார் ஜெகதீசன், மண்டல துணை தாசில்தார் தரணி வருவாய் ஆய்வாளர் வேலுமணி, வி.ஏ.ஒ ஜெயசந்திரன், இளவரசன் உள்ளிட்டபள்ளி மாணவ மாணவிகள் அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.

Tags

Next Story
ai solutions for small business