சட்டம், ஒழுங்கு பிரச்சனை குறித்து கோட்டாட்சியர் ஆலோசனை

சட்டம், ஒழுங்கு பிரச்சனை குறித்து கோட்டாட்சியர் ஆலோசனை
X

சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளை குறித்து கோட்டாட்சியர் கவிதா காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

ஆரணி ,போளூர், கலசபாக்கம் பகுதிகளில் சட்டம் - ஒழுங்கு பிரச்சனை குறித்து காவல்துறை அதிகாரிகளுடன் கோட்டாட்சியர் ஆலோசனை நடத்தினார்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி ,போளூர், கலசபாக்கம் பகுதிகளை உள்ளடக்கிய சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளை குறித்து கோட்டாட்சியர் கவிதா காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

டிஎஸ்பிக்கள் கோடீஸ்வரன், அறிவழகன், பயிற்சி டிஎஸ்பி ரூபன் குமார், வட்டாட்சியர்கள் பெருமாள், ஜெகதீசன், ஆரணி கிராமிய காவல் ஆய்வாளர் முத்துக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ஆரணி, போளூர், கலசப்பாக்கம் உட்பட்ட பகுதிகளில் சட்டம் ஒழுங்கை பராமரிப்பது குறித்து விவாதிக்கப்பட்டது, மேலும் நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்தும் கேட்டறிய பட்டது.

தற்போது ஒமிக்ரான் தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் ஆரணியை சேர்ந்த இரண்டு பேருக்கு தோற்று உறுதியானதால் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க காவல் துறை , வருவாய் துறையினர் கூட்டம் அதிகமாக உள்ள நிகழ்ச்சிகளுக்கு அனுமதி தரக்கூடாது என்று கோட்டாட்சியர் பேசினார்

Tags

Next Story
the future of ai in healthcare