ஆரணி தொகுதியில் திமுக போட்டி! தொண்டர்கள் மகிழ்ச்சி

ஆரணி தொகுதியில் திமுக போட்டி! தொண்டர்கள் மகிழ்ச்சி
X

பட்டாசு வெடித்து கொண்டாடிய திமுகவினர்

ஆரணி தொகுதியில் திமுக போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டதை அடுத்து தொண்டர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஆரணி தொகுதியில் கூட்டணி கட்சியிடம் இருந்து பெற்று திமுக கட்சியே நேரிடையாக களம் இறங்க உள்ளது. இதனை கொண்டாடும் விதமாக ஆரணி டவுன் அண்ணா சிலை அருகே தொகுதி பொறுப்பாளர் அன்பழகன் தலைமையில் திமுக கட்சியினர் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.

திருவண்ணாமலை மாவட்டத்தை பொருத்தவரை திருவண்ணாமலை, ஆரணி மக்களவை தொகுதி என இரண்டு தொகுதிகள் உள்ளது.

ஆரணி மக்களவைத் தொகுதி தமிழ்நாட்டில் மக்களவைத் தொகுதிகளில் 12 வது தொகுதி ஆகும், இதில் போளூர், ஆரணி, செய்யாறு, வந்தவாசி, செஞ்சி, மயிலம் சட்டமன்றத் தொகுதிகள் அடங்கியுள்ளது. இதில் செஞ்சி, மயிலம் விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. கிட்டத்தட்ட சுமார் 14 லட்சம் வாக்காளர்கள் இந்த தொகுதியில் உள்ளனர்.

இத்தொகுதியில் காங்கிரஸ் 7 முறை தனித்து நின்றும் கூட்டணி வைத்தும் வெற்றி பெற்றுள்ளது. திமுக 2 முறையும் அதிமுக 2 முறையும் பாமக 2 முறையும் தாமாக மதிமுக தலா ஒரு முறை வெற்றி பெற்றுள்ளது.

தற்சமயம் இந்த 6 தொகுதிகளில் 3 சட்டமன்ற தொகுதிகள் எதிர்கட்சி வசம் உள்ளன. போளூர், ஆரணி அதிமுக வசமும், மயிலம் பாமக வசமும் உள்ளன.

இதற்கு முன்பு வந்தவாசி தொகுதியாக இருந்தபோது, காங்கிரஸ் கட்சி அதிக முறை வெற்றி பெற்றுள்ளது. 1962 ல் காங்கிரஸ் ஜெயராமன், 1967, 1971ல் திமுக சார்பில் விஐடி விஸ்வநாதன், 1977ல் அதிமுக சார்பில் வேணுகோபால், 1980 ல் காங்கிரஸ் பட்டுசாமி, 1984, 1989 ல் காங்கிரஸ் பலராமன், 1991 ல் காங்கிரஸ் கிருஷ்ணசாமி, 1996 ல் தமாகா பலராமன், 1998, 1999 ல் பாமக துரை, 2004 ல் மதிமுக செஞ்சி.ராமச்சந்திரன் வெற்றி பெற்று எம்.பியாக இருந்தனர்.

தொகுதி பெயர் மாற்றம் ஏற்பட்ட பின் நடைபெற்ற தேர்தலில் 2009 ல் காங்கிரஸ் கிருஷ்ணசாமி வெற்றி பெற்றார். 2014 ல் அதிமுகவை சேர்ந்த செஞ்சி.ஏழுமலை என்பவர் வெற்றி பெற்றார். 2019-ல் நடைபெற்ற தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் விஷ்ணு பிரசாத் வெற்றி பெற்றார்.

இந்த ஆரணி தொகுதியில் திமுக தனித்துப் போட்டியிட்டு சுமார் 40 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது . தற்போது இந்த தொகுதியில் திமுக நேரடியாக போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளதால் கட்சியினர் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த அறிவிப்பு வெளியானதும் திமுகவினர் பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.

இதில் மாவட்ட துணை செயலாளர் ஜெயராணி ரவி, நகர மன்ற தலைவர் மணி ,நகர பொருளாளர் தட்சிணாமூர்த்தி, ஒன்றிய செயலாளர், ஒன்றிய கவுன்சிலர்கள், நகர மன்ற உறுப்பினர்கள் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!