நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணியே வெற்றி பெறும்; அமைச்சா் எ.வ.வேலு உறுதி

திமுக தொகுதி அலுவலகத்தை திறந்து வைத்த அமைச்சர் வேலு
வருகிற மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரி தொகுதி என 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணிதான் வெற்றி பெறும் என்று அமைச்சா் எ.வ.வேலு கூறினாா்.
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி நகரம் காா்த்திகேயன் சாலையில் மக்களவைத் தேர்தல் திமுக தொகுதி அலுவலகத்தை தமிழக பொதுப் பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் எ.வ.வேலு திறந்துவைத்தாா்.
பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது,:
கடந்த மக்களவைத் தேர்தலில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள இரண்டு தொகுதிகளான திருவண்ணாமலையில் திமுகவும், ஆரணியில் கூட்டணிக் கட்சியான காங்கிரஸும் போட்டியிட்டு வெற்றி பெற்றது. வருகிற மக்களவைத் தேர்தலில் இரண்டு தொகுதிகளில் திமுக வெற்றி பெறுகிற வகையில் செயல்பட முன்கூட்டியே தேர்தல் பணியாற்ற ஆரணியில் திமுக அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது. திமுகவின் இரண்டரை ஆண்டுகள் ஆட்சியின் பல்வேறு நல்ல திட்டங்களை மக்களுக்கு எடுத்துக் கூறி வெற்றி பெறுவோம்.
குறிப்பாக, மாவட்டத்துக்கு நலத் திட்டங்களை கொண்டு வந்து சேர்ப்பதற்கு மாவட்டத்தின் அமைச்சா் என்ற முறையில் நான் பாலமாக இருந்து பணியாற்றிக் கொண்டிருக்கிறேன். பொதுமக்களிடமிருந்து பெறுகின்ற மனுக்கள் மீது முக்கியத்துவம் அளித்து நடவடிக்கை எடுத்து செயல்படுத்தப்பட்டு வருகிறது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் இரண்டு தொகுதிகளில் வெற்றி பெறுவது போல, தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகள், புதுச்சேரி தொகுதி என 40 தொகுதிகளிலும் வெற்றி பெற முடியும் என்ற இலக்கு அடிப்படையில் திமுக தொண்டா்கள் பணியாற்றுகிறாா்கள்.
அதன்படி 40-க்கும் 40 என மக்களவைத் தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்றாா்.
நிகழ்ச்சியில் வடக்கு மாவட்ட திமுக செயலா் தரணிவேந்தன், முன்னாள் எம்எல்ஏ சிவானந்தம், நகா்மன்றத் தலைவா் மணி, மாவட்ட துணைச் செயலா் ஜெயராணி ரவி, ஒன்றியச் செயலா்கள் ஒன்றியக் குழுத் தலைவா்கள் பேரூராட்சித் தலைவா்கள் மகாலட்சுமி கோவா்தன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
முன்னதாக திருவண்ணாமலை மாவட்டம், பெரணமல்லூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் , மாவட்டதுணை செயலாளருமான பாணடுரங்கன் இல்ல திருமண வரவேற்பு(ஆரணி) நிகழ்ச்சியில், பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் ஏ. வ. வேலு நேரில் சென்று மணமக்களை வாழ்த்தினர். உடன் மாவட்டசெயலாளர் தரணிவேந்தன்,
மாநில மருத்துவ அணி துணை தலைவர் எ. வ. வே. கம்பன், மாநில விவசாய தொழிலாளர் அணி துணை செயலாளர் அன்பழகன், ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர் விஷ்ணுபிரசாத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu