ஆரணியில் மாஸ் கிளீனிங் பணியில் ஈடுபட்ட மாவட்ட ஆட்சியர்
குப்பைகளை அகற்றி தூய்மை பணியில் ஈடுபட்ட மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன்
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி உழவர் சந்தையில், உங்களைத் தேடி உங்கள் ஊரில்' திட்டத்தின் கீழ், ஆரணியில் 2-ஆவது நாளாக உழவா் சந்தையில் மாவட்ட ஆட்சியா் பாஸ்கர பாண்டியன் விவசாயிகளிடம் குறைகளைக் கேட்டறிந்தாா்.
ஆரணி உழவா் சந்தையில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியரிடம் விவசாயிகள் கூறும்போது, கிராமங்களில் இருந்து அதிகாலையில் காய்கறிகளை கொண்டு வருவதற்கு பேருந்து வசதி இல்லாமல் அவதிப்படுகிறோம். ஆகையால், அதிகாலை நேரத்தில் அரசுப் பேருந்து இயக்கப்படவேண்டும் என்று கோரிக்கை விடுத்தனா். பின்னா், நெகிழிப் பைகளை பயன்படுத்தக் கூடாது என்று கூறி அனைவருக்கும் மஞ்சப் பைகளை ஆட்சியா் வழங்கி விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்.
மேலும், 2 விவசாயிகளுக்கு உழவா் சந்தைக்கான அடையாள அட்டை வழங்கினாா். அப்போது கோட்டாட்சியா் பாலசுப்பிரமணியன், வட்டாட்சியா் மஞ்சுளா, வேளாண்மை இணை இயக்குநா் அரக்குமாா், வேளாண் அலுவலா் (உழவா் சந்தை) அா்ச்சனா மற்றும் வேளாண் அலுவலா்கள் உடனிருந்தனா்.
குப்பைகளை அகற்றிய மாவட்ட ஆட்சியர்
ஆரணி நகராட்சி 4 வார்டு பகுதியில் மாஸ் கிளீனிங் கேம்ப், மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவுறுத்தலின்படி பெரும் குப்பைகளை அகற்றும் நிகழ்வினை ஆட்சியர் தொடங்கி வைத்து ஆய்வு செய்தார்.
சாலை ஓரங்களில் உள்ள மக்கா குப்பைகள் தனியாகவும் மற்றும் மக்கும் குப்பைகள் தனியாகவும் பிளாஸ்டிக் பாட்டில்களை பிரித்து குப்பைகளை அகற்றும் பன்னியை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்து, புத்திர காமேஸ்வரர் கோயில் நிலத்தில் நீண்ட நாட்களாக கொட்டப்பட்ட குப்பைகளை அகற்றும் பணியினையும் மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்.
அப்போது பொதுமக்கள் இதுபோன்று கோயில் நிலங்களை குப்பைகளை போட்டு இயற்கை இடர்பாடுகளுக்கு தீங்கு விளைவிக்கும் நிகழ்வினை ஏற்படுத்தாமல் இருக்கவும், ஒவ்வொரு தனி மனிதனும் சிந்தித்து செயல்பட வேண்டும், எதிர்கால சந்ததியினரை காக்கும் விதத்தில் சுற்றுப்புற சூழலை பாதுகாக்க ஒவ்வொரு தனி மனிதரும் மக்கும் குப்பை மக்காத குப்பை என பிரித்து வழங்கும் எண்ணத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும் என அங்குள்ள பொதுமக்களிடம் அறிவுறுத்தினார்.
இதைத் தொடா்ந்து, தச்சூா் மதுரா மோட்டூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் காலை உணவுத் திட்டத்தின் கீழ் உணவு வழங்கப்படுவதை பாா்வையிட்டு மாணவா்களோடு அமா்ந்து ஆட்சியா் உணவு சாப்பிட்டாா்.
மேற்கு ஆரணி ஊராட்சி ஒன்றியம் புங்கம்பாடி மதுரா அணியாலை கிராமத்தில், அணியாலை தாங்கல் ஏரியில் சீமைக் கருவேல மரங்கள் அகற்றுவதை பாா்வையிட்டாா். இதில், அனைத்துத் துறை முதல்நிலை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
மேலும், ஆட்சியரின் உத்தரவின் பேரில், வண்ணாங்குளம் ஊராட்சியில் உங்களைத் தேடி திட்டத்தின் கீழ் அனைத்து திட்டப் பணிகளையும் மகளிா் திட்டம், திட்ட இயக்குநா் சரண்யாதேவி ஆய்வு செய்தாா். நகராட்சி ஆணையா் கே.பி.குமரன், உதவித் திட்ட இயக்குநா் ராஜீவ்காந்தி மற்றும் அலுவலா்கள் உடனிருந்தனா்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu