தேவிகாபுரம் கோயில் பங்குனி உத்திர திருவிழா: இருதரப்பினரிடையே அமைதிக் கூட்டம்

தேவிகாபுரம் கோயில் பங்குனி உத்திர திருவிழா: இருதரப்பினரிடையே அமைதிக் கூட்டம்
X

தேவிகாபுரம் கோயில் பங்குனி உத்திரத் திருவிழா சேத்துப்பட்டில் இரு தரப்பு அமைதி கூட்டம் நடைபெற்றது.

தேவிகாபுரம் கோயில் பங்குனி உத்திரத் திருவிழாவையொட்டி சேத்துப்பட்டில் இரு தரப்பு அமைதி கூட்டம் நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அடுத்த தேவிகாபுரம் அருள்மிகு பெரியநாயகி அம்மன் சமேத கனககிரி ஈஸ்வரர் கோயில் பங்குனி உத்திரத் திருவிழா நடத்துவது குறித்து சேத்துப்பட்டு தாலுக்கா அலுவலகத்தில் இருதரப்பினரிடையே அமைதி கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு தாசில்தார் பாலமுருகன் தலைமை வகித்தார். இதில் திருவண்ணாமலை டிஎஸ்பி குணசேகரன், போளூர் டிஎஸ்பி குமார், சமூக பாதுகாப்பு தாசில்தார் கோவிந்தராஜன், இன்ஸ்பெக்டர்கள், இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் முத்துசாமி, செயல் அலுவலர் சிவாஜி ஆகியோர் கலந்துகொண்டு அமைதிக் கூட்டத்தை தனித்தனியாக நடத்தினர்.

இதில் தேவிகாபுரம் பெரியநாயகி அம்மன் பங்குனி உத்திர திருவிழாவை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி அனைத்து சமூக மக்களையும் ஒருங்கிணைத்து எவ்வித ஜாதி வேறுபாடு இன்றி இந்து சமய அறநிலைத்துறை மூலம் திருவிழா நடத்த சேத்துப்பட்டு தாலுகா அலுவலகத்தில் நடைபெற்ற அமைதி கூட்டத்தில் இரு தரப்பிலும் சம்மதம் தெரிவித்தனர்.

இந்தக் கூட்டத்தில் இருதரப்பை சேர்ந்த கிராம பொதுமக்கள் சார்பாக 72 பேர் கலந்து கொண்டனர். பங்குனி உத்திர திருவிழாவை இந்து சமய அறநிலைத்துறை நடத்த அவர்கள் அனைவரும் சம்மதம் தெரிவித்தனர்.

கடந்த வருடம் சேத்துப்பட்டு அடுத்த தேவிகா புரத்தில் கனககிரீஸ்வரர் சமேத பெரியநாயகி அம்மன் கோயிலில் இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக பங்குனி திருவிழாவை நடத்த ஆட்சியர் முருகேஷ், அப்போது தடை விதித்தார்.

விழாவை நடத்துவது தொடர்பாக இரு பிரிவினர் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இது குறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு பிரிவினர் வழக்கு தொடர்ந்தனர்.

இந்நிலையில் உயர் நீதிமன்ற உத்தரவுபடி அனைத்து சமூக மக்களையும் ஒருங்கிணைத்து எவ்வித சாதி வேறுபாடு இன்றி இந்தி சமய அறநிலைத்துறை மூலமாகவே இத்திருவிழா நடத்த வேண்டும் என குறிப்பிட்டு இருந்தது , அதன்படி தற்போது இரு தரப்பினரின் சம்மதத்துடன் விழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர் வெள்ளோட்டம் குறித்து ஆலோசனை கூட்டம்

தேசூர் பேரூராட்சியில் உள்ள இந்து அறநிலைத்துறைக்கு சொந்தமான காசி விஸ்வநாதர் கோவில் மரத்தேர் வெள்ளோட்டம் விடுவது குறித்தும், ரேணுகாம்பாள் கோவில் புதுப்பிப்பது பற்றியும், திருமால்பாடி ரங்கநாதர் கோவில் கும்பாபிஷேகம் நடத்துவது பற்றியும் ஆலோசனை கூட்டம் நடந்தது.

இதையொட்டி இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜோதி, லட்சுமி, செயல் அலுவலர் சரண்யா லட்சுமி, மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் சேகரன் மாவட்ட அறங்காவலர் உறுப்பினர் பாண்டுரங்கன் ஆகியோர் கொண்ட குழுவினர் தேசூருக்கு வந்தனர்.

அவர்களை பேரூராட்சி கவுன்சிலர்கள், அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் பொறுப்பாளர் மனோகரன் சிவசுப்பிரமணியர் கோவில் நிர்வாகி சிவா மற்றும் ஊர் பொதுமக்கள் வரவேற்றனர்.

பின்னர் தயார் நிலையில் உள்ள காசி விஸ்வநாதர் கோவில் மரத்தேரை பார்வையிட்டு வெள்ளோட்டம் விடுவது குறித்து ஆலோசனை நடத்தினர்.

மேலும் பழமை வாய்ந்த ரேணுகாம்பாள் கோவிலை புதுப்பிக்கவும் ஆலோசனை வழங்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் காசி விஸ்வநாதர் கோவிலை சுற்றிப் பார்த்தனர்.

அப்போது வந்தவாசி இந்துசமய அறநிலையத்துறை ஆய்வாளர் நடராஜ் உள்பட பலர் உடன் இருந்தனர்.

Tags

Next Story
தமிழக அரசு ரூ.10 லட்சம் கோடி கடனில் உள்ளது - அண்ணாமலை பேட்டி