நீர்நிலைகளில் சிக்கியவர்களை காப்பாற்றுவது குறித்த செயல்விளக்கம்

நீர்நிலைகளில் சிக்கியவர்களை காப்பாற்றுவது குறித்த செயல்விளக்கம்
X

தீயணைப்பு படையினரின் செயல்விளக்கம்

நீர்நிலைகளில் சிக்கிக்கொண்டவர்களை காப்பாற்றுவது குறித்து ஆரணி அருகே கிராம மக்களுக்கு தீயணைப்புத்துறையினர் செயல்விளக்கம் அளித்தனர்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே நீர்நிலைகளில் சிக்கிக்கொண்ட அவர்களை காப்பாற்றுவது குறித்து கிராம மக்களுக்கு தீயணைப்புத்துறையினர் செயல்விளக்கம் அளித்தனர். அப்போது ஏரிக்குள் அந்த பகுதியை சேர்ந்த சிறுவர்களை இறக்கி தண்ணீரில் சிக்கியவர்களை அங்கிருக்கும் பொருட்களின் உதவியுடன் எப்படி மீட்பது என்பது குறித்து பயிற்சி அளித்தனர் .

ஆரணி தீயணைப்பு நிலைய அலுவலர் பாலகிருஷ்ணன் தலைமையில் வட்டாட்சியர் சுபாஷ் சந்தர் முன்னிலையில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது இதில் தீயணைப்பு வீரர்கள் திரளான கிராம மக்கள் பங்கேற்றனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்