செங்கம் அருகே எட்டு வழி சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்

செங்கம் அருகே எட்டு வழி சாலை எதிர்ப்பு இயக்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை- சேலம் இடையே அமைய உள்ள எட்டு வழி சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து எட்டு வழி சாலை எதிர்ப்பு இயக்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
செங்கம் அருகே உள்ள பெரும் பட்டம் கிராமத்தில் எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் அருள் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது சட்டப்பேரவை தேர்தலின் போது தி.மு.க. அளித்த வாக்குறுதி படி எட்டு வழி சாலை திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.
விவசாய நிலத்தையும், வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க, அ.தி.மு.க. ஆட்சியில் போராடியதைவிட, தி.மு.க. ஆட்சியில் எங்களது போராட்டம் வீரியமாக இருக்கும். 8 வழிச் சாலை திட்டத்தை நிறைவேற்ற மாட்டோம் என தமிழக அரசின் அரசிதழில் வெளியிடும் வரை போராட்டம் தொடரும் என தெரிவித்துள்ளனர்.
இதில் செங்கம் சுற்று பகுதியில் இருந்து விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.சேத்துப்பட்டு ஒன்றியம் ஆத்தூர் ஊராட்சியில் 8 வழி சாலை எதிர்ப்பு இயக்கத்தினர் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இளங்கோ என்பவரது நிலத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் இந்தத் திட்டத்தால் பாதிக்கப்பட்ட 15க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu