விவசாய கிணற்றில் ஆண் சடலம் மீட்பு: பெரணமல்லூரில் பரபரப்பு

விவசாய கிணற்றில் ஆண் சடலம் மீட்பு: பெரணமல்லூரில் பரபரப்பு
X

பெரணமல்லூர் அருகே உள்ள மேல்மட்டை- விண்ணமங்கலம் பகுதி கிணற்றில் மீட்கப்பட்ட சடலம்.

திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் அருகே, கிணற்றில் 45 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் அருகே உள்ள மேல்மட்டை- விண்ணமங்கலம், சாலை பகுதியை சேர்ந்தவர் பூங்காவனம். இவரது விவசாய கிணற்றில், அடையாளம் தெரியாத ஆண் சடலம் மிதப்பது தெரிய வந்தது. கிராம நிர்வாக அலுவலர் பாபுவிற்கு, தகவல் தெரிவித்தனர். அவர், பெரணமல்லூர் காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்தார்.

போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தினிதேவி தலைமையில் போலீஸார் மற்றும் தீயணைப்பு நிலைய வீரர்கள், அங்கு விரைந்து சென்று பிணத்தை மீட்டனர். மீட்கப்பட்டவருக்கு 45 வயது இருக்கும் என்று தெரிகிற்து. அவர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. இறந்தவர் நீல நிற லுங்கியும், வெள்ளை சட்டையும் அணிந்திருந்தார். முதல் கட்ட விசாரணைக்கு பின்னர் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக, திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!