தமிழக ஆளுநரை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஆர்ப்பாட்டம்

தமிழக ஆளுநரை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஆர்ப்பாட்டம்
X

இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நீட் மசோதாவை குடியரசு தலைவருக்கு அனுப்பாததால், ஆளுனரை கண்டித்து ஆரணியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஆரணி கிளை சார்பில் ஆரணி பழைய பேருந்து நிலையம் எம்.ஜி.ஆர். சிலை முன்பாக மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட நிர்வாகி சி.அப்பாசாமி தலைமை தாங்கினார்.

ஆர்ப்பாட்டத்தில் இந்தி திணிப்பு, நீட் தேர்வு மசோதா மற்றும் சட்டசபையில் நிறைவேற்றிய மசோதாக்களை மத்திய அரசுக்கு அனுப்பாமல் காலம் கடத்தும் தமிழக ஆளுநரை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.

இதில் மாவட்ட நிர்வாகி பி.கண்ணன் உள்பட நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டனர்.

Tags

Next Story
கடம்பூரில் வெடிபொருட்கள் பதுக்கிய 5 பேரை கைது செய்த போலீஸ்!