ஒமிக்ரான் அறிகுறி பாதித்த பெண்ணின் சகோதரருக்கும் கொரோனா

ஒமிக்ரான் அறிகுறி பாதித்த பெண்ணின் சகோதரருக்கும் கொரோனா
X
ஆரணியை சேர்ந்த ஒமிக்ரான் அறிகுறி பாதித்த பெண்ணின் சகோதரருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

காங்கோ நாட்டில் இருந்து இந்தியா திரும்பிய ஆரணியை அடுத்த பையூர் அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த சங்கீதா என்பவருக்கு ஒமைக்ரான் அறிகுறி இருப்பதாக தமிழக சுகாதாரத்துறை அறிவித்து அவரை திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரியில் தொடர் சிகிச்சை அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

இதையடுத்து அவரது குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் சங்கீதாவின் தந்தை ராஜனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு திருவண்ணாமலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த நிலையில் 2-வது முறையாக அவரது குடும்பத்தினருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதன் முடிவுகள் இன்று வெளியானது அதில் சங்கீதாவின் சகோதரர் சதீஷ் என்பவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு அவரை சுகாதாரத்துறையினர் உடனடியாக திருவண்ணாமலை மருத்துவமனையில் சேர்த்தனர்.

இது சம்பந்தமாக ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் சுதா தலைமையில் சுகாதார களப்பணியாளர்கள் தொடர்ந்து அவரது குடும்பத்தினரை கண்காணித்து வருகின்றனர்.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!