ஆரணியில் வங்கி ஊழியர்கள் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு

ஆரணியில் வங்கி ஊழியர்கள் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு
X

தச்சூர் சாலையில் இந்தியன் வங்கியில், ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து, அங்கு கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. 

ஆரணியில், வங்கி ஊழியர்கள் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் , 4 நாட்கள் வங்கி மூடப்படும் என தெறிவித்துள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த தச்சூர் சாலையில், இந்தியன் வங்கி இயங்கி வருகின்றன. இதில் 13 பேர் பணிபுரிந்து வருகின்றனர். இதில் வங்கி ஊழியர்கள் 2 பேருக்கு உடல் நலம் பாதிக்கபட்டதால், எஸ்.வி. நகரம் ஆரம்ப சுகாதார மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர்.

இதில், பெண் ஊழியர் உட்பட 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனையடுத்து வங்கியில் பணிபுரிந்த மற்ற ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யபட்டன. மேலும் கொரோனாவால் பாதிக்கபட்டவர்கள் தங்களின் வீட்டிலேயே தனிமைபடுத்தி கொள்ள வேண்டும் என்றும் 4 நாட்கள் வங்கி இயங்கக்கூடாது என்றும், மருத்துவத்துறையினர் அறிவுறுத்தினர். இதனால், வங்கிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!