ஆரணி சுப்பிரமணி சாஸ்திரியார் பள்ளி ஆசிரியைகளுக்கு கொரோனா தொற்று

ஆரணி சுப்பிரமணி சாஸ்திரியார் பள்ளி ஆசிரியைகளுக்கு கொரோனா தொற்று
X
பைல் படம்.
ஆரணி சுப்பிரமணி சாஸ்திரியார் மேல்நிலைப்பள்ளியில் 2 ஆசிரியைகளுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி சுப்பிரமணிய சாஸ்திரியார் மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு பயிலும் 3 மாணவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் பள்ளியில் பணிபுரியும் 103 ஆசிரியர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 2 ஆசிரியைகளுக்கு தொற்று கண்டறியப்பட்டது.

இதனையடுத்து ஒரு ஆசிரியை செய்யாறு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மற்றொரு ஆசிரியை வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!