இரு பெண் காவலர்களுக்கு கொரோனா- கண்ணமங்கலம் போலீஸ் ஸ்டேஷன் மூடல்

இரு பெண் காவலர்களுக்கு கொரோனா- கண்ணமங்கலம் போலீஸ் ஸ்டேஷன் மூடல்
X

கோப்பு படம்

இரு பெண் காவலர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து, கண்ணமங்கலம் காவல் நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலம் போலீஸ் ஸ்டேஷனில், 25க்கும் மேற்பட்ட போலீசார் பணிபுரிகின்றனர். இதில், இரண்டு பெண் போலீசாருக்கு காய்ச்சல் ஏற்பட்டது இதையடுத்து அவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டதில், கொரோனா தொற்று ஏற்பட்டது உறுதி செய்யப்பட்டது.

இதன் காரணமாக, போலீஸ் ஸ்டேஷன் தற்காலிகமாக மூடப்பட்டு கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. மேலும், உடன் பணிபுரியும் போலீசாருக்கு, கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன் முடிவுகள் வந்த பிறகே, மற்றவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதா என்பது தெரியவரும்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!