தொடரும் மணல் திருட்டால் நிலத்தடி நீர்மட்டம் குறைகிறது; விவசாயிகள் வேதனை

தொடரும் மணல் திருட்டால் நிலத்தடி நீர்மட்டம் குறைகிறது; விவசாயிகள் வேதனை
X

செய்யாற்றுபடுகையில் மணல் அள்ளப்படும் இடம்

ஆரணி அருகே தொடரும் மணல் திருட்டால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருகிறது என விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த சேத்துப்பட்டு அருகே உள்ள ஓதலவாடி பகுதி தொடர்ந்து மணல் அதிக அளவில் திருடப்பட்டு வருவதால் அப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுவதாக விவசாயிகள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த சேத்துப்பட்டு அருகே உள்ள ஓதலவாடி பகுதியில் வழியே செய்யாற்று படுகை செல்கிறது.

இங்க செய்யாற்றுபடுகையை நம்பி தான் அப்பகுதி விவசாயிகள் விளை நிலங்களில் பயிர்களை சாகுபடி செய்து வருகின்றனர்.

பல ஆண்டு காலமாக , குறிப்பாக இரவு நேரங்களில் செய்யாற்று படுகை ஒட்டி உள்ள சில இடங்களில் மாட்டு வண்டி, சரக்கு ஆட்டோ டிராக்டர்கள் மூலம் மணல் திருடர்கள் மணலை கடத்தி செல்கின்றனர்.

இந்த செய்யாற்று படுகையை நம்பி தான் அப்பகுதியில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் பயிா் சாகுபடி செய்து வருகின்றனர்.

தற்போது திருவண்ணாமலை மாவட்டத்தில் கோடை மழை பெய்தாலும் போதிய நிலையில் மழை இல்லாததால் இங்குள்ள விளை நிலங்களில் உள்ள கிணறுகளின் நீர்மட்டம் மிக விரைவாக குறைந்து வருகிறது.

இதனால் ஆற்றங்கரையை ஒட்டி உள்ள பகுதிகளில் விவசாயம் செய்வதற்கான தண்ணீர் கிணறுகளை நம்பி தற்போது விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதிலும் குறிப்பாக ஆற்றுப்படுகை ஒட்டி உள்ள மேட்டு குடிசை, சானார் தோப்பு மற்றும் அப்பகுதி கிராம மக்கள் சிலர் இரவு நேரங்களில் ஆற்றில் இருந்து மாட்டு வண்டிகள் மூலம் மணலை அள்ளி வந்து அருகில் உள்ள மறைவிடங்களில் அதிக அளவில் குவித்து வைக்கின்றனராம்.

பின்னர் அந்த மணலை குறிப்பிட்ட நேரங்களில் வரும் மினி லாரி சரக்கு ஆட்டோ மூலம் வெளியிடங்களுக்கு விற்பனை செய்கின்றனர்.

குறிப்பாக அருகில் உள்ள போளூர் ,களம்பூர், ஆரணி, கூடலூர் போன்ற பகுதிகளுக்கு மணல்கள் அதிக அளவில் இங்கிருந்து எடுத்துச் செல்லப்படுகிறது.

அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தாலும் அவர்கள் இது வருவதற்குள் கடத்தல்காரர்களுக்கு அதிகாரிகள் வரும் தகவல் தெரிந்து தப்பித்து சென்று விடுகிறார்கள். தச்சூர் வழியாக செல்லும் ஆற்றுப் படுகையில் மணல் அதிக அளவில் திருடப்படுகிறதாம்.


மணல் கடத்தல் ஈடுபட்டபோது பறிமுதல் செய்யப்பட்ட டிராக்டர்

ஆற்றில் இருந்து மணல் கடத்தி செல்லும் வாகனங்களை அப்பகுதி பொதுமக்கள் விவசாயிகள் மடக்கிப் பிடித்து காவல்துறையினரிடம் தகவல் தெரிவித்து ஒப்படைத்தும் மறுநாளே மணல் கடத்தல் காரர்கள் தங்களது வாகனங்களை மீட்டு வந்து மீண்டும் அதே தொழிலில் ஈடுபடுகிறார்கள் என அப்பகுதி பொதுமக்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு மாட்டு வண்டிகளில் மணல் கடத்தப்படுவதை பார்க்க பகுதி மக்கள் அந்த மாட்டு வண்டிகளை சிறை பிடித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். ஆனால் இரண்டு மணி நேரம் ஆகியும் காவலர்கள் வராததால் மணல் கடத்தல்காரர்கள் தங்களை விட்டால் போதும் என பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்டு இனி இதுபோன்ற செயல்களில் ஈடப் பட மாட்டோம் எனக் கூறி தப்பித்து சென்ற கதையும் நடந்துள்ளது.

இந்த மாவட்டத்தில் இப்பகுதியில் கோடை மழை பொய்த்த நிலையில் ஆற்றுப்படுகையில் உள்ள மணலை விற்று பணமாக இரவு பகலாக கொள்ளையடித்து வரும் அவர்களை கைது செய்ய வேண்டும்.

மேலும் மணல் கொள்ளை தொடர்ந்தால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து குடி தண்ணீருக்கே திண்டாட வேண்டிய நிலை வந்துவிடும் எனவே விவசாயத்தை காக்கவும் இப்பகுதி வளம் காக்கவும் காவல்துறையும் , வருவாய்த் துறையும் இணைந்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் அவ்வாறு நடவடிக்கை இல்லை எனில் விவசாயிகள் இப்பகுதி பொதுமக்கள் இணைந்து சாலை மறியலில் ஈடுபடுவோம் என விவசாயிகள் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

Next Story
டெல்லி டூ அமெரிக்கா அரை மணி நேரத்துலயா? என்னப்பா சொல்ற எலான் மஸ்க்..! | Delhi to America Flight Timings